என் மடிக்கணினி திடீரென நின்று விடுகிறது. எப்படி தடுப்பது?

என் மடிக்கணினியில் intel core i5, 16 GB RAM உள்ளது. HP probook.
உபுண்டு 20.04 கேடீஈ உடன் உள்ளது.
இரு ஆண்டுகளாக, சிக்கல் ஏதும் இல்லாமல் இயங்கியது.

இரு நாட்களாக, அவ்வப்போது, திடீரென நின்று விடுகிறது.

மடிக்கணினியை மூடி விட்டு, பெரிய திரை, தனி விசைப்பலகை, சுட்டி இணைத்து பயன்படுத்துகிறேன்.

நின்று விடும்போது, மடிக்கணினியைத் திறந்தால், அதன் விசைப்பலகை பகுதிகள் மிக அதிக சூடாக உள்ளன.

இதை எப்படி தடுப்பது? அப்படி நின்று விடும் போது, என்ன ஆகிறது என்று எப்படி அறிவது?

ஓரளவு திறந்த நிலையிலேயே வைத்து பயன்படுத்தினால், சூடாவதைத் தடுக்கலாமா?

இயங்குதளத்தை அப்டேட் செய்து பார்க்கவும். மேலும் தங்கள் இயங்குதளத்திற்கு கிடைக்கும் லேட்டஸ்ட் கர்னலை நிறுவவும். புதிய கர்னல் சிக்கலை தீர்க்க உதவலாம்.