வணக்கம் GLUG உறவுகளே!
Tamil Open Source Software Conference 2025 (TossConf25)
Venue: St. Joseph’s Institute of Technology , Old Mahabalipuram Road, Kamaraj Nagar, Semmancheri, Chennai, Tamil Nadu 600119
Map: https://maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6
Map: https://maps.app.goo.gl/8b4cEB1uKFXeBGYF6
தமிழ்நாட்டின் முழுமையான திறந்த மூல (Open Source) விழாவான TossConf25 இல், தமிழ்நாட்டின் அனைத்து GLUGக்களையும் (GNU/Linux User Groups) ஆர்வமுடன் பங்கேற்க அழைக்கிறோம்!
இம்மாநாடு திறந்த மூல சமூகங்களை ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து, அவர்களின் பயணங்கள், முயற்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை பகிரும் ஒரு அரிய வாய்ப்பு.
என்ன செய்யலாம்?
உங்கள் GLUG யின் செயல்பாடுகள், திட்டங்கள் பற்றி பகிரலாம்
ஒரு சிறிய அமைப்புச் சாளரம் (Stall) அமைத்து உங்கள் குழுவை மற்றும் பங்களிப்புகளை அறிமுகப்படுத்தலாம்
உங்கள் உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் ஒரு உரை (Talk) அல்லது செயல்பாடுகள் (Activity / Workshop) நடத்தலாம்
மற்ற GLUGகளுடன் கலந்துரையாடி, எதிர்கால கூட்டாக செயல்படும் திட்டங்களை அமைக்கலாம்
என்ன பகிர வேண்டும்?
-
உங்கள் GLUG பெயர்
-
பிரதிநிதிகள் யார் யார் வருகிறார்கள்
-
Stall / Talk / Activity களில் எதையாவது செய்ய விருப்பமா?
-
உங்கள் திட்டங்கள், அனுபவங்கள், மற்றும் எதிர்கால பார்வை பற்றி
நம்ம விழாவில் சந்திப்போம்!
For queries please contact,
Syed Jafer - 9176409201
Thanga Ayyanar - 9597729724