என்னுடைய உபுண்டு 24.04 பூட் செய்யும் போது படத்தில் உள்ளவாறு பிழை வருகிறது. இப்பொழுது தற்காலிகமாக இன்னொரு பார்ட்டிசியன்ல் உபுண்டு 24.04 இன்ஸ்டால் செய்து விட்டேன். தற்போது என்னுடைய புது OS மூலமாக பழைய OS ஐ சரி செய்ய முடியுமா?
புதிதாக நிறுவப்பட்ட உபுண்டு வழியாக பூட் செய்யவும். லாகின் செய்தபின் ctrl-alt-t
அழுத்தி வரும் டெர்மினலில்
sudo blkid
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை இங்கே பகிரவும்.
sudo mount /dev/nvme0n1p6 /mnt
df -h /mnt
sudo umount /mnt
இந்த மூன்று கமாண்டுகளையும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.
*ஏற்கனவே உள்ள உபுண்டுல் கடைசியாக இணையத்தில் இருந்து ஒரு கமாண்ட்டை எடுத்து இயக்கும் போது autoremove என்ற கமாண்டையும் சோ்த்து இயக்கியுள்ளேன்.
sudo mount /dev/nvme0n1p6 /mnt
sudo tar -Izstd -cvf ~/varlog.tar.zst -C /mnt/var/log .
sudo umount /mnt
இந்த கமாண்டை இயக்கவும். இது உங்கள் ஹோம் டைரக்டரியில் (~) varlog.tar.zst
என்ற கோப்பை உருவாக்கும், அதை உங்கள் கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்து அதன் இணைப்பை இங்கே பகிரவும்.
sudo mount /dev/nvme0n1p6 /mnt
sudo find /mnt -maxdepth 1 -ls
sudo umount /mnt
இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
[Shaik] இந்த படிகளை முயற்சிக்கவும்
- பழைய Ubuntu OS Partition கண்டுபிடிக்க
lsblk
இது உங்கள் Disk layout-ஐ காட்டும். உங்கள் பழைய OS-இன் root partition-ஐ கண்டுபிடியுங்கள் (அது பொதுவாகsdaX
அல்லதுnvme0nXpY
மாதிரியான பெயருடன் இருக்கும்).
2. பழைய OS-ஐ Mount செய்யவும்
முதலில், ஒரு directory உருவாக்கி, அதில் பழைய OS-ஐ mount செய்யவும்
sudo mkdir /mnt/oldubuntu
sudo mount /dev/sdX /mnt/oldubuntu
அதற்குப் பிறகு, boot
மற்றும் efi
partition-களும் சேர்க்க வேண்டும் (அவை தனியாக இருந்தால்):
sudo mount /dev/sdY /mnt/oldubuntu/boot # boot partition (இருந்தால்)
sudo mount /dev/sdZ /mnt/oldubuntu/boot/efi # EFI partition (இருந்தால்)
3. chroot மூலமாக பழைய OS-ஐ சரி செய்வது
sudo mount --bind /dev /mnt/oldubuntu/dev
sudo mount --bind /proc /mnt/oldubuntu/proc
sudo mount --bind /sys /mnt/oldubuntu/sys
sudo chroot /mnt/oldubuntu
4. GRUB Boot Loader-ஐ மீண்டும் நிறுவவும்
grub-install /dev/sdX
update-grub
5. Unmount செய்து Reboot செய்யவும்
exit
sudo umount -R /mnt/oldubuntu
sudo reboot
இப்போது, உங்கள் பழைய OS Boot ஆக முயற்சி செய்ய வேண்டும்.
sudo mount /dev/nvme0n1p6 /mnt
sudo find /mnt -not -uid 0 -not -regex '/mnt/home.*$' | xargs stat -c '%u:%g %U:%G %n' | curl --data-binary @- https://paste.rs; echo
sudo umount /mnt
இந்த கமாண்டுகளை இயக்கவும். இது ஒரு இணைய இணைப்பை தரும் அதை இங்கே பகிரவும்.
தோழர், மேலே இருந்த இணைய இணைப்பில் முழூ விபரமும் இல்லை, அதனால்
sudo mount /dev/nvme0n1p6 /mnt
sudo find /mnt -not -uid 0 -not -regex '/mnt/home.*$' | xargs stat -c '%u:%g %U:%G %n' | zstd -o ~/fileowners.zst
sudo umount /mnt
இந்த கமாண்டுகளை இயக்கவும். இது fileowners.zst
என்ற கோப்பை உங்கள் Home டைரக்டிரியில் உருவாக்கும் அதை உங்கள் கூகிள் டிரைவில் அப்ளோட் செய்துவிட்டு அதன் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.