I am using Ubuntu 24.04.02, while working on my laptop the screen flickers while moving cursor to the specific places can I get any help. Up to now I had tried the below steps but cannot solve the problem:
Updated from 24.04.01 to 24.04.02
Tried both Wayland and X11
Changed graphics settings to both intel and Nvidia
Tried all the possibilities nothing worked. Tried some other distros also same issue repeats. I think the problem with gnome DE. The actual problem is when I move cursor in certain area some where like bottom right of the screen the screen starts to flickers until I move the cursor.
The problem only occurs only with Intel graphics card when i change to Nvidia the flickering problem gone. But the Nvidia is power hungry so i want to go with Intel.
இந்த கமாண்டை இயக்கவும், இது nvidia என்று காட்டினால்
sudo prime-select intel
என்று வைத்து intel gpu விற்கு மாற்றிக்கொள்ளவும். பின் கணினியை ரீபூட் செய்து மீண்டும் தாங்கள் செலக்ட் செய்த gpu சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்று மீண்டும் sudo prime-select query கமாண்டை இயக்கி சரிபார்க்கவும்.
இதே sudo prime-select query கமாண்டை intel என்று காட்டினால் sudo prime-select nvidia என்று வைத்து nvidia gpuவை பிரைமரியாக வைத்து ரீபூட் செய்து சோதிக்கவும்.
பிரைமரி gpuவை மாற்றி பார்த்து உங்கள் சிக்கல் எந்த gpuவில் வருகின்றது என்று கண்டுபிடிக்கலாம். அப்படி கண்டுபிடித்து அந்த gpuவை செக்கண்டரியாக வைத்துக்கொள்ளலாம்.
தாங்கள் மேற்கூறிய கமாண்டை இயக்கும்போது on-demand என்று வந்தது (முன்னதாக நான்தான் இதனை தேர்வு செய்திருந்தேன்). பிறகு Intel ஐ தேர்வு செய்தேன் சிக்கல் சரியாகவில்லை. Nvidia வை தேர்வு செய்யும்போது சிக்கல் ஏதும் இல்லாமல் வேலை செய்கிறது.
Nvidia ல் எந்த சிக்கலும் இல்லை என நான் ஏற்கனவே அறிந்ததே ஆனால் Nvidia வை தேர்வு செய்து பயன்படுத்தும்போது மின் சக்தி அதிகமாக செலவாகிறது, எனவேதான் Intel ல் சிக்கலை தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிகுக்கிறேன்.
ஆம், nvidia வில் பயன்படுத்தும்போது அதிகமாக மின்சக்தி தேவைப்படும். ஆனால் டூயல் ஜீபியு பயன்படுத்தும்போது இதுபோல் ஒரு ஜீபியு நன்றாகவும் ஒரு ஜீபியு சற்று சொதப்பலாகவும் இயங்கி விடுகின்றது. அது அந்தந்த கர்ணல் டிரைவர்கள் எப்படி ஒன்றோடு ஒன்று ஒத்துழைக்கின்றன என்பதை பொருத்து அமைந்து விடுகின்றது.
உங்களுக்கு மின்சக்தி குறைக்க வேண்டும் எனில் சிக்கலை பொருட்படுத்தாமல் Intel ஐ பயன்படுத்தவும், உங்களுக்கு சிக்கல் வராமல் இருக்க வேண்டும், மிண் சக்தி பற்றி கவலை இல்லை எனில் nvidia வை பயன்படுத்தவும்.