ஆம் uvcdynctrl-udev.log என்ற கோப்புதான் உங்கள் கணினியில் இருக்கும் டிஸ்க் இடத்தை நிறப்பியுள்ளது. அதை நீங்கிவிட்டோம். ஆனால் ஏன் அந்த கோப்பு அவ்வாறு பெருகி உள்ளது என்று தெரியவில்லை.
sudo apt purge --dry-run uvcdynctrl
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும். இதன் மூலம் ஏன் இந்த uvcdynctrl உங்கள் கணினிக்குள் வந்துள்ளது என்று தெரியும்.
இந்த கமாண்டை இயக்கி இந்த மென்பொருளை நீக்கி விடவும். இந்த மென்பொருளை எதனால் நிறுவினீர்கள் என்று தெரியவில்லை, இதை நீக்கிவிடுவதான் மூலம் மீண்டும் இதே சிக்கல் வராது. ஆனால் கேமரா சம்பந்தப்பட்ட வேறு ஏதேனும் சிக்கல் வர வாய்ப்பு உண்டு. இதை நீக்கிவிட்டு கணினியை ரீபூட் செய்யவும், கேமரா சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.