லினக்ஸ் மின்ட்: கணினிக்குள் நுழைய முடியவில்லை usb1-port6:Cannot enable

இரண்டு நாட்களாக லினக்ஸ் மின்றுக்குள் நுழைய முடியவில்லை. கணினியைத் தொடக்கியதும்

usb usb1-port6:Cannot enable. Maybe the USB cable is bad

என்று தொடர்ச்சியாக வருகிறது. USBஇலும் எதுவும் இணைக்கப்படவில்லை.

அதுபோல் திரையில் வரும்போது ctrl-alt-f6 என்று கொடுக்கவும். கண்சோலில் லாகின் கேட்கிற்னதா என்று பார்க்கவும். அப்படி கேட்டால் உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும். பின்

sudo systemctl list-units --state failed

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

df -sh
ping -c 3 1.1.1.1

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

df -sh கொடுத்தால் invalid options – ‘s’ என்று வருகிறது.
du -sh கொடுத்துப் பார்த்தேன்(சரியா எனத் தெரியாது). 61G என்று வந்தது.

ping -c 3 1.1.1.1 இற்கு

3 packets transmitted, 3 received, 0% packet loss, time 2004ms rtt min/avg/max/mdev = 7.296/8.530/10.166/1.205 ms

என்று வருகிறது.

மன்னிக்கவும் அது df -h என்று இருக்க வேண்டும்.

(df -h; journalctl -b) 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

curl:(6) Could not resolve host: paste.rs

sudo mv /etc/resolv.conf /etc/resolv.conf.disabled
echo 'nameserver 1.1.1.1' | sudo tee /etc/resolv.conf

இந்த கமாண்டை இயக்கவும், பின்

இங்கே உள்ள கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்

find / -mindepth 1 -maxdepth 1 | while read dir; do findmnt --pseudo --target "${dir}" >/dev/null || echo "${dir}"; done | xargs sudo du -sxk | sort -k1n

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்தக் கட்டளையைக் கொடுக்கவே முடியவில்லை. அதற்குள்ளாகவே usb usb1-port6 பிழைச் செய்தி வந்து விடுகிறது. 4, 5 முறை முயன்று விட்டேன்

ctrl-alt-f6 கொடுத்து வரும் டெர்மினலில் முயர்சிக்கவும்

sudo find /var -mindepth 1 -maxdepth 1 | xargs sudo du -sxk | sort -k1n

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

திருத்தம்: கமாண்ட்லைனை திருத்தியுள்ளேன்

sudo find /var/log -mindepth 1 -maxdepth 1 | xargs sudo du -sxk | sort -k1n

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

sudo rm -f /var/log/uvcdynctrl-udev.log
sudo mv /etc/resolv.conf.disabled /etc/resolv.conf

இந்த இரண்டு கமாண்டை இயக்கவும் பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

மகிழ்ச்சி. சிக்கல் தீர்ந்தது. வழக்கம் போல் உங்கள் உதவிக்குப் பெருவணக்கம். :pray:
ஒரு log கோப்பை அழித்திருப்பது போலத் தெரிகிறது. இந்தச் சிக்கலின் அடிப்படை என்ன என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லுங்களேன்.