இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்து அதன்படி உங்கள் கர்ணலை அப்டேட் செய்யவும். கர்ணலை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சிக்கல் சரியாக வாய்ப்பு உள்ளது. அப்படியும் சரியாகவில்லை எனில், புதிதாக நிறுவிய கர்ணல் வழியாக பூட் செய்து
உங்கள் லினக்ஸ் மிண்ட் கணினியில் ஸ்டார்ட் மெனுவில் Update Manager என்று தட்டச்சு செய்து வரும் மென்பொருளில் View -> Linux Kernels என்ற தேர்வினை செய்து வரும் திரையை இங்கே பகிரவும். Warning என்று ஏதேனும் திரை வந்தால் continue கொடுத்து கர்ணர்கள் என்னென்ன உள்ளன என்று காட்டும் திரையை இங்கே பகிரவும்.
ஆம் தொடர்கிறது, புதிதாக ஒரு issue. os booting option சென்று தான் login menu வருகிறது. அதனால் ubuntu os மாற்றலாமா என்று பார்த்தேன். சிறப்பான Linux os suggestions சொல்லுங்க தோழர்.
இப்பொழுது பயன்படுத்திக்கொண்டிருக்கும் லினக்ஸ்மிண்டில் வரும் ஸ்பீக்கர் சிக்கல் புதிதாக நிறுவப்போகும் லினக்சில் வராமல் இருக்கும் என்று நம்பிக்கை இருந்தால் நிறுவுங்கள்.
நல்ல டிஸ்ட்ரோ கெட்ட டிஸ்ட்ரோ என்று எதுவும் இல்லை. உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ அந்த டிஸ்ட்ரோவை நிறுவி பயன்படுத்துங்கள்.