லினக்சில் சிக்கல் எனச் சொல்வதற்கு முன் இதைச் செய்து விடுங்கள்

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி update manager தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். பின்பு Refresh பட்டன் அழுத்தவும். பின்பு Install பட்டன் அழுத்த அப்டேட்கள் நிறுவத் தொடங்கும். பாஸ்வேர்டு கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயனர் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

இப்போது view மெனு தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்யவும். பின் வரும் விண்டோவில் Continue கொடுக்கவும். பின் 5.15.0-33 (லேட்டஸ்ட் எதுவோ) கர்ணலை தேர்வு செய்து Install கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயனரின் கடவுச்சொல் கொடுத்து லேட்டஸ்ட் கர்ணலை நிறுவவும். கர்ணல் நிறுவியபின் ரீபூட் செய்யவும்.

ரீபூட் செய்த பிறகும் தங்களின் சிக்கல் நீடித்தால் இங்கு கூறவும்.

8 Likes