VGLUG's Next Milestone - Free Code Camp For Kids

வணக்கம்,

கணினி, தொழில்நுட்பம் போன்றவை கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரையிலும் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்கும் பணியை VGLUG அமைப்பு 100 கிராமங்களில் 100 GLUGs என்கிற முன்னெடுப்பின் மூலம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக VGLUG அமைப்பு ‘Free Code Camp For Kids’ என்கிற முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பானாம்பட்டு GLUG-ல் அடுத்த இரண்டு (அக்டோபர் 8 மற்றும் 9) நாட்களுக்கு கணினி பற்றிய அறிமுகத்தையும், கோடிங்-ஐ எளிய முறையிலும், விளையாட்டுகள் மற்றும் அனிமேஷன் மூலமாகவும் கற்றுதர இந்த கேம்ப்பை VGLUG நடத்துவுள்ளது.

இது போன்று, குழந்தைகளுக்கான இலவச கோடிங் வகுப்புகள்/கேம்ப் உங்களது கிராமத்திலோ அல்லது பள்ளியிலோ நடத்த விரும்பினால் எங்களை 9600789681 தொடர்பு கொள்ளவும்.

100 கிராமங்களில் 100 GLUGs - முன்னெடுப்பு

More details

2 Likes

வணக்கம்…என் பெயர் சிவகேசவன்…எனது சொந்த ஊர் மதுரை திருமங்கலம்…எனது கிராமத்தில் இது போன்ற நல்ல முயற்சிகள் நடைபெறுவதை நான் விரும்புகிறேன்…திருமங்கலத்தில் இது சாத்தியமா…? அங்கு ஏராளமான பள்ளி மாணவர்களும், குழந்தைகளும் வசிக்கின்றனர்… இந்த தொழில்நுட்பங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்த உங்கள் தரப்பிலிருந்து ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறேன்

4 Likes

விழுப்புரத்திலும் சிறார்களுக்கான முதல் நிகழ்வு இது. பிற ஊர்களிலும் செய்யலாம்.

மதுரையில் இத்தகைய நிகழ்வுகள் நடத்த தன்னார்வலர்கள் இருப்பின், இங்கே பதில் தரச் சொல்க.

அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளித்து, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

VGLUG - Kids Code Camp
அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு தினங்களில் நமது VGLUG சார்பாக ‘Kids Code Camp’ பானம்பட்டு கிராமத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பயன்பெற்றனர்.

Camp - Glimpse video

‘The New Indian Express’ - இன்றைய நாளிதழில் நமது ‘Kids Code Camp’ குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

இது போன்று, குழந்தைகளுக்கான இலவச கோடிங் வகுப்புகள்/கேம்ப் உங்களது கிராமத்திலோ அல்லது பள்ளியிலோ நடத்த விரும்பினால் எங்களை 9600789681 தொடர்பு கொள்ளவும்.