Volunteers needed for translating FreeCodeCamp curriculum in Tamil

உங்களில் பலர் https://www.freecodecamp.org/ என்னும் வலைதளம் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம். அதில் பல நிரலாக்க மொழிகளை இலவசமாக சுயமாகவே கற்றுக்கொள்ள வசதிகள் உள்ளன. இத்தளத்தில் தான் நான் ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் வெப் டெவலப்மெண்ட் பயின்றேன். அவை மிக பயனுள்ளதாகவும் கற்றலை எளிமையாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தளம் முழுக்க லாப நோக்கமற்று தன்னார்வலர்களால் பராமரிக்கப்படுகிறது. அவற்றை பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய கட்டமைப்பு உருவாக்கி ஊக்குவிக்கிறார்கள். நான் இதில் தமிழ் மொழிபெயர்ப்பு செய்ய தன்னார்வலராக இணைந்துள்ளேன். பல மொழிகளில் மொழிபெயர்ப்பு விரைவாக நடைபெறுகிறது. அதற்கான பணியை இதுவரை யாரும் தமிழில் தொடங்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இப்பணியை நான்தான் இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கினேன். தற்போது இன்னும் ஒரு தன்னார்வலர் இணைந்துள்ளார். இப்பணி ஒரிருவர் செய்து முடிக்க கூடியதில்லை. பலரும் ஆர்வமாக முன் வந்தால் அனைவரும் இணைந்து விரைவாக இப்பணியை முடிக்கலாம். இதில் பங்கேற்க நீங்கள் விரும்பினால் இந்த உரலியில் நீங்கள் பதிவு செய்து தொடங்கலாம்.

மேலும் தகவலுக்கு தயவுசெய்து இத்தளத்தை பார்க்கவும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய காணொலிகளைப் படைப்பாக்கப் பொது உரிமத்தில் வெளியிடக் கோரியிருந்தேன், மறுத்து விட்டார்கள். இப்போது நீங்கள் மொழி பெயர்க்கச் சொல்லிக் கேட்கும் தளம் படைப்பாக்கப் பொது உரிமத்தில் இருக்கிறதா? இல்லை அவர்களுடைய தனியுரிமத்தில் இயங்கும் தளமா?

பலரது கூட்டுழைப்பில் உருவாகும் படைப்புகள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருப்பதே மனிதர் அனைவருக்கும் பயன் தரும்.

Freecodecamp படைப்புகள் என்ன உரிமையில் உள்ளன?

1 Like

தெரியவில்லை… நான் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு பதில் பதிவிடுகிறேன்.

Free code Camp தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாசகம்

Nothing in these terms gives the company any ownership rights in intellectual property that you share with the website, such as your account information or other content you submit to the website. Nothing in these terms gives you any ownership rights in the company’s intellectual property, either.

Between you and the company, you remain solely responsible for content you submit to the website. You agree not to wrongly imply that content you submit to the website is sponsored or approved by the company. These terms do not obligate the company to store, maintain, or provide copies of content you submit.

Content you submit to the website belongs to you, and you decide what permission to give others for it. But at a minimum, you license the company to provide content that you submit to the website to other users of the website. That special license allows the company to copy, publish, and analyze content you submit to the website.

இதன் அடிப்படையில் பார்த்தால் அங்கு இருக்கும் தகவலுக்கான உரிமம் அவர்களிடத்திலேயே இல்லை. எனவே அவர்கள் அதை உரிமம் மாற்றி வெளியிட முடியாது. அங்கு கட்டுரைகள் வெளியிட்டுள்ள ஒவ்வொருவரையும் தனியாக கேட்டு உரிமத்தை மாற்ற வேண்டும் இல்லையேல் திறந்த உரிமத்தில் வெளியாகியுள்ள பாடங்களைக் கண்டறிந்து மொழியாக்கம் செய்ய வேண்டும்.

இங்கே கூறப்பட்டுள்ள Special License எது. அதன் லிங்க் இருந்தால் பகிரவும்.

கண்டன்ட் கொடுப்பவர்கள் Creative Commons ல் கொடுத்தாலும் இவர்கள் சொல்லும் Special License அவற்றிர்கு பொருந்துமானால் அது டூயல் லைசன்ஸ் முறையை பயன்படுத்துவது போன்றது.

எனக்கு தெரிந்து, எந்த ஒரு தளம் எளிமையான Creative Commons ஐ முழுமையாக பின்பற்றாமல் இப்படி குழப்பம் மிக்க உரிமங்களை பயன்படுத்துகின்றதோ அதன் நோக்கம் கட்டற்ற இயக்கச் சிந்தனையை திவிர்த்து வேறு நோக்கத்துடன் செயல்படும் திட்டம் என்று எனக்கு தோன்றுகின்றது.