சகோ எனது உபுண்டு மடிக்கணிணியில் wifi மூலம் இணையத்தை இணைத்து பயன்படுத்துகிறேன். Ookla speed test-ல் இணைய வேகத்தை பரிசோதித்த போது download speed 24-26 mbps & upload 22-24 mbps கிடைக்கிறது. ஆனால் விண்டோசில் download 41-43 & upload 38-40 கிடைக்கிறது. உபுண்டுவில் google dns ipv4-ல் 8.8.8.8 பதிவு செய்தும் இதே நிலை தான் உள்ளது.
உபுண்டுவில் இணைய வேகத்தை அதிகரிக்க ஏதேனும் வழி உள்ளதா? அல்லது இது தான் அதிகபட்ச வேகமாக இருக்குமா?
(set -x; lspci -vt; lsusb -vt) 2>&1 | curl --data-binary @- https://paste.rs
இந்த கமாண்ட் லைனை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.
உங்கள் கணினியை இனையத்தில் இணைத்துவிட்டு மீண்டும் இந்த கமாண்டை இயக்கிவும்
(set -x; sudo lspci -vt; sudo lsusb -vt) 2>&1 | curl -v --data-binary @- https://paste.rs; echo
வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
sudo lspci -vv -s 0000:03:00.00
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்
[[ ! -d /etc/modprobe.d ]] && sudo mkdir /etc/modprobe.d; echo "options rtl8188ee swenc=1 ips=0 swlps=0 fwlps=0 aspm=0" | sudo tee /etc/modprobe.d/rtl8188ee.conf
இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.