Windows நிறுவப்பட்ட எனது laptop இல் அதனை முற்றாக remove செய்துவிட்டு LINUX அல்லது UBUNTU ஐ மட்டும் install செய்வது எப்படி?

நான் 6 வருடங்களாக எனது laptop இல் windows தான் நிறுவி இருந்தேன்.
ஆனால் இப்போது அந்த os ஐ முற்றாக remove செய்துவிட்டு லினக்ஸ் அல்லது உபுண்டு ஐ மட்டும் install செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால் எனது laptop இல் உள்ள documents எதுவும் delete ஆகாமல் பாதுகாப்பாக மாற்றவும் வேண்டும்.

எனவே தயவு செய்து இதற்க்கு தீர்வு ஒன்றைத் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!!!

உங்களிடம் எத்தனை partitions உள்ளன ?

தேவையான documents ன் மொத்த அளவு என்ன?

அவை அனைத்தையும் முதலில் ஒரு USB hard disk அல்லது இணையத்தில் நகல் எடுத்து வையுங்கள்.

மூன்று PARTITIONS (C,D,E) உள்ளன. அவற்றுள் அண்ணளவாக 160 GB அளவில் DOCUMENTS உள்ளது.
நன்றி.

நல்லது.

அவற்றை வேறு ஒரு external USB hard disk க்கு நகல் எடுக்க இயலுமா?

ஆம் SIR! முடியும். ஆனால் ஒரு சில வாரங்கள் ஆகலாம். எனவே WINDOWS ஐ remove செய்துவிட்டு linux ஐ install செய்ய ஆசைப் படுகிறேன். அது எப்படி என்பது புரியவில்லை…

நன்றி!!

விண்டோசை எடுத்துவிட்டு லினக்சை நிருவுவது மிகவும் எளிது. ஆணால் விண்டோசில் உள்ள கோப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் @tshrinivasan அவர்கள் வேறு ஒரு எக்ஸ்டர்னல் யூஎஸ்பி ஹார்ட் டிஸ்கில் பேக்கப் எடுக்க சொல்கின்றார்.

தங்களுக்கு கோப்புகள் தேவை இல்லை எனில் தாராலமாக லினக்சை நிருவ துவங்கவும்.

கோப்புக்கள் முக்கியம் தேவை SIR!
HARD DISK வாங்குவதற்கு எண்ணியுள்ளேன். வாங்கிய பிறகு செய்ய முயற்ச்சிக்கிறேன்…
நன்றி!!!

நண்பரே! முதலில் தங்கள் HDD ன் காலி இடத்தை (40Gb -70gb ) குறைந்த பட்சம் ஒதுக்கி வைக்கவும். Portion management உதவியுடன் unallocation செய்து. Linux உகந்த formatக்கு மாற்றி install செய்யலாம் (boot discகே போதும்) இன்னும் sdd ,HDD இரண்டும் இருந்தால் boot directory sddயிலும், home diectortyயை hddலும் வைத்து வேகம் மற்றும் இடவசதி ஒருங்கே வழங்க முடியும்.