Windows shared printer to linux mint

how to connect (windows 10) shared printer in linux mint

பிரிண்டரின் மாடல் என்ன? யூஎஸ்பி பிரிண்டரா அல்லது அதை வைஃபை மூலம் தொடர்பு கொள்ள முடியுமா?

Printer model hp laserjet 1020 plus, wifi connection bro

உங்கள் கணினியும் அந்த பிரிண்டரும் ஒரே நெட்வெர்கில் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது உங்கள் கணினியில் இருந்து அந்த பிரிண்டரின் IP முகவரியை ping பன்ன முடிகின்றதா?

windows 10 கணிணியில் usb wire மூலம் printer இணைக்கப்பட்டு உள்ளது. நான் எனது மடிக்கணிணி wifi மூலம் இணைத்துள்ளேன். Samba முறையில் ஒரு கோப்பையை windows-ல் இருந்து linux-ற்கு பகிர்ந்து உள்ளேன். Wifi-யில் இரண்டும் இணைந்து உள்ளது சகோ

உங்கள் பிரிண்டரை விண்டோஸ் உதவி இல்லாமல் Wifi ல் இணைத்து உள்ளீர்களா? அதன் IP address உங்களுக்கு தெரியுமா?

விண்டோஸ் கணிணியுடன் தான் printer-ஐ
இணைத்துள்ளேன. தனியாக wifi-ல் இணைக்கவில்லை சகோ.

விண்டோஸில் ஒரு கணிணியின் ip address -ஐ பதிவு செய்தாலே மற்றொரு கணிணியில் இணைந்துள்ள printer தெரிகிறது. ஆனால் Linux -ல் அதன் ip address -ஐ பதிவு செய்தால் அந்த printer தெரியவில்லை

உங்கள் பிரிண்டர் WiFi வசதியை பெற்றுள்ளது, HP Smart App மூலம் உங்கள் பிரிண்டரை உங்கள் WiFi நெட்வேர்கில் இணைக்கலாம். அப்படி செய்வதன் மூலம் உங்கள் பிரிண்டரை ஒரு கணினியின் உதவி இல்லாமல் நேரடியாக உங்கள் நெட்வெர்கின் பயன்படுத்தலாம்.

லினக்சில் Samba வழியாக விண்டோசில் ஷேர் செய்யப்பட்டுள்ள பிரிண்டர்களை இணைக்கலாம். ஆனால் அது உங்கள் பிரிண்டருக்கும் விண்டோஸ் கணினிக்கும் செக்கியூரிட்டியில் பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கும். எனவே தற்போது வரும் பிரிண்டர்கள் நெட்வெர்கில் நேரடியாக இணைத்து பயன்படுத்தும்படி வடிவமைக்கின்றார்கள். உங்கள் பிரிண்டரும் அப்படிப்பட்ட ஒரு பிரிண்டரே ஆகும்.

எனவே, விண்டோசில் HP Smartapp வழியாக உங்கள் பிரிண்டரை முதலில் உங்கள் WiFi நெட்வெர்கில் நேரடியாக இணைக்கவும் (HP SmartApp என்பது ஒரு தன்னுரிமை மென்பொருள் அதனால் அதில் எப்படி செய்வது என்பதை இங்கே கூற இயலாது, ஆணால் யூடியூபில் பல வீடியோக்கள் அதை பற்றி கூறிகின்றன, தேடிப்பார்க்கவும்).

உங்கள் WiFi நெட்வெர்கில் பிரிண்டரை இணைத்துவிட்டால் லினக்சில் அந்த பிரிண்டர் தாணாகவே வந்துவிடும் (அப்படி வரவில்லை என்றாலும் எளிதாக இணைத்து விடலாம்). விண்டோஸ் ஷேர் வழியாக அந்த பிரிண்டரை இணைப்பது நல்லதல்ல.

I don’t see this printer has wifi capability

https://support.hp.com/in-en/product/product-specs/hp-laserjet-1020-printer-series/model/3329726

Can anyone confirm ?

ஆம், இந்த பிரிண்டரில் WiFi வசதி இல்லை.

வேறு வழி இல்லை, ஒன்று அந்த பிரிண்டரை லினக்சில் நேரடியாக இணைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது Samba வழியாகத்தான் பிரிண்ட் செய்ய முடியும்.

முதலில் அந்த விண்டோஸ் கணினி லினக்சில் தெரிகின்றதா என்று பார்க்க வேண்டும், அதற்கு லினக்ஸ் மிண்டில் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

smbclient -W your-windows-domain -U your-windows-username -L your-windows-machine-ip-address

இந்த கமாண்டில்

  • your-windows-domain என்பதற்கு பதிலாக உங்கள் விண்டோசின் WorkGroup/Domain ஐ குறிப்பிடவும். உங்களுக்கு உங்கள் WorkGroup/Domain தெரியவில்லை எனில் -W your-windows-domain என்ற ஆப்ஷனை smbclient கமாண்டிற்கு கொடுக்க வேண்டாம்.
  • your-windows-ip-address என்பதற்கு பதிலாக பிரிண்டர் ஷேர் செய்யப்படிருக்கும் விண்டோஸ் கணினியின் IP Address ஐ கொடுக்கவும்.
  • your-windows-username என்பதற்கு பதிலாக அந்த விண்டோசில் லாகின் செய்ய பயன்படுத்தும் username ஐ கடுக்கவும்

இவற்றை மாற்றி கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

when i use this command i got result like this bro

  • http://localhost:631 இந்த இணைப்பிற்கு உங்கள் லினக்ஸ் மிண்டில் இருந்து செல்லவும்.
  • Administration என்பதை கிளிக் செய்யவும்
  • Add Printer என்பதை கிளிக் செய்யவும்
  • Windows Printer via SAMBA என்பதை கிளிக் செய்து continue கிளிக் செய்யவும்.
  • Connection எனும் இடத்தில் smb://192.168.0.102/HP%20LaserJet%201020 என்று குறிப்பிடவும். பின் continue கிளிக் செய்யவும்.
  • Name எனும் இடத்தில் உரிய பெயரை கொடுக்கவும். பின் continue கொடுக்கவும்.
  • Make என்பதில் HP தேர்வு செய்து continue கொடுக்கவும். Model என்பதில் உங்கள் விண்டோஸ் பிரிண்டரின் மாடலை தேர்வு செய்யவும். பின் Add Printer என்பதை கிளிக் செய்யவும். இப்போது பிரிண்டர் சேர்த்தாகிவிட்டது என்று தகவல் வரும்.

பின் மீண்டும் http://localhost:631 சென்று Administration கிளிக் செய்து Manager Printers கிளிக் செய்யவும். அங்கே புதிதாக உருவாக்கப்பட்ட பிரிண்டர் தெரியும் அதை கிளிக் செய்து வரும் திரையில் Maintanance என்பதை கிளிக் செய்து பின் Print Test Page என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் விண்டோஸ் பிரிண்டர் பிரிண்ட் செய்ய துவங்கும்.

உங்கள் லினக்ஸ் திரையில் NT_STATUS_ACCESS_DENIED என்று வந்தால் உங்கள் விண்டோசில் பிரிண்டர் பர்மிஷனை எல்லோரும் பிரிண்ட் செய்யும்படி வைத்துவிண்டு மீண்டும் மேலே கூறியபடி டெஸ்ட் பேஜை பிரிண்ட் செய்து பார்க்கவும்.

பர்மிஷன் மாற்றியும் பிரிண்ட் நடக்கவில்லை எனில் விண்டோசில் இருக்கும் பிரிண்டர் டிரைவரும் லினக்சில் இருக்கும் பிரிண்டர் டிரைவரும் ஒத்துப்போகவில்லை. அந்த பிரிண்டரை உங்கள் லினக்ஸ் கணினியில் நேரடியாக இணைத்து மட்டுமே பிரிண்ட் செய்ய முடியும்.

தாங்கள் சொன்னது போல் முயற்சி செய்தேன் ஆனாலும் printer வேலை செய்யவில்லை. “Session setup failed: NT_STATUS_ACCESS_DENIED” என்று வருகிறது.

இதை பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன். அதன்படி உங்கள் விண்டோசில் பாஸ்வேர்ட் இல்லாமல் பிரிண்டரை பயன்படுத்த பர்மிஷன்களை மாற்றி அமைக்கவும்.

ஆபத்தான வழிமுறை

அப்படி உங்களால் விண்டோசில் மாற்ற முடியவில்லை எனில்,

  1. http://localhost:631 செல்லவும்
  2. Administration கிளிக் செய்யவும்
  3. Manage Printers கிளிக் செய்யவும்
  4. முன்பு சேர்க்கப்படிடிருக்கும் விண்டோஸ் பிரிண்டரை கிளிக் செய்யவும்.
  5. Administration மெனுவை கிளிக் செய்து Delete Printer என்பதை கிளிக் செய்யவும்.

முன்பு சேர்க்கப்பட்டிருக்கும் விண்டோஸ் பிரிண்டர் நீக்கப்பட்டுவிடும். பின் இங்கே குறிப்பிட்டுள்ள வழிமுறையை பயன்படுத்தி மீண்டும் அதே விண்டோஸ் பிரிண்டரை சேர்க்கவும்.

ஆணால் வழிமுறையில் இந்த முறை Connection என்பதில் smb://192.168.0.102/HP%20LaserJet%201020 என்பதற்கு பதிலாக smb://your-user-name:your-password@192.168.0.102/HP%20LaserJet%201020 என்று உள்ளபடி வைக்கவும். இங்கே your-username என்பது நீங்கள் அந்த விண்டோஸ் கணினியில் லாகின் செய்ய பயன்படுத்தும் username. your-password என்பது விண்டோசில் அந்த username பயன்படுத்தும் பாஸ்வேர்ட்.

இங்கே விண்டோஸ் கணினியின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் பிளெயின் டெக்‌ஸ்டாக பாஸ்வேர்டை கொடுக்கின்றீர்கள். இதனால்தான் நான் முன்பே விண்டோஸ் வழியாக பிரிண்டரை ஷேர் செய்வது உங்கள் கணினிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று கூறினேன்.