YaCy (யாசி) - Distributed & Personal Search Engine - Used for Bookmarking

நான் வெகு நாட்களாக பெரும் தலைவலியாக கருதிவருவது இணைப்புகள் சேகரிப்பது (அதாவது Bookmarking). உலாவியில் வரும் bookmarking பயன்படுத்துவது தனியாக ஒரு கூடுதல் வேலை செய்வது போல. சரியாக folder, tags எல்லாம் போட்டு சேகரிக்க வேண்டும், அப்படி சேகரித்தாலும், நமக்கு தலைப்பு நியாபகம் இருக்காது. படித்த கட்டுரையும் அதன் சொற்களும்தான் நியாபகம் வரும், அதை வைத்துக்கொண்டு தேடி மீண்டும் அதே இணைப்பைக் கண்டு பிடிப்பதற்குள்… உஷ்… யப்பா என்று ஆகிவிடும். இதை சுலபமாக்க நிறைய முயற்சி செய்துவிட்டேன். எல்லமே எங்காவது ஒரு பக்கம் வேலை வைத்து விடுகிறது.

இன்று இந்த YaCy என்ற மென்பொருள் பற்றிக் கேள்விப்பட்டேன். இதை ஒரு தனி நபருக்கான கூகிள் போலப் பயன்படுத்தலாம். இதை எப்படி ஒரு bookmarking செயலியாகப் பயன்படுத்துவது ஒருவர் பதிவிட்டு இருந்தார். பட்டென பிடித்துவிட்டது. அது பற்றிய கதையும், அதை எளிதாக பயன்படுத்த Firefox Extension செயலியும் தயார் செய்து எப்படி பயன்படுத்துகிறேன் என்பதையும் இங்கு ஆங்கிலத்தில் பதிவிட்டு உள்ளேன்.

படித்துப்பாருங்கள், உதவியாக இருக்கலாம்.

3 Likes

நன்றி, அருண்மொழி!

2 Likes