Any desk software install செய்ய வேண்டும் யாராவது சொல்லுங்கள்

Any desk software install செய்ய வேண்டும் யாராவது சொல்லுங்கள்

லினக்ஸ் மின்றின் சாப்ட்வேர் மேனேஜரிலேயே Any desk என்று தேடினால் போதும். பிறகு install சொடுக்கி நிறுவிக் கொள்ளலாம். மிக எளிது தானே!

1 Like

Software manager இல் இருக்கும் any desk application ஐ install செய்த பின், தற்போது ஓபன் ஆகவில்லை, எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இந்த இணைப்பில் உள்ளதைச் செய்து விட்டீர்களா என உறுதிப்படுத்துங்கள்

நீங்கள் மேலே கூறியதை செய்து விட்டேன்

ரீபூட் செய்த பிறகு anydeskஇல் என்ன வருகிறது?

ரீபூட் செய்த பிறகு anydesk click செய்யும் போது taskbar ல் icon வருகிறது பின்பு தானாக மறைகிறது…

ஏற்கெனவே இந்தச் சிக்கல் இருப்பது போலத் தெரிகிறது. Can't install AnyDesk on Linux Mint 20 as libminizip1 and libgtkglext1 dependencies goes wrong - Unix & Linux Stack Exchange உள்ள வழிகளைப் பின்பற்றிப் பாருங்கள்.

லினக்ஸ் மிண்ட் Software Manager வழியாக நிருவப்பட்ட Anydesk சரியாக வேலை செய்யவில்லை என்றால் Flatpak வழியாகவும் நிருவலாம். முதலில் தற்போது உள்ள Anydesk எந்த வழியில் நிருவப்பட்டு உள்ளது என்று காண்போம். இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg -l '*anydesk*'


dpkg-query: no packages found matching anydesk
இது போல தெரிகிரது

dpkg -l | grep -i anydesk
flatpak list --app | grep -i anydesk

இதை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

AnyDesk com.anydesk.Anydesk 6.2.0 stable system
இது போல தெரிகிரது

sudo flatpak update --system --app --force-remove --commit=03212bbeb5b523c0aeacf16fc35cf07f7531a08b14944e7e77d77f7e616d95f1 com.anydesk.Anydesk

இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.

1 Like

இப்பொது work ஆகிறது,
நன்றி…

மகிழ்ச்சி

1 Like

இதில் உள்ள பெரிய பதினாறு அடிமான எண் எதைக் குறிக்கிறது?

flatpak ல் ஒரு மென்பொருளின் ஒவ்வோரு version ம் கிட் போன்று ஒரு ஹேஷ் முலம் சேமிக்கப்டடுகின்றது. அங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட் லேட்டஸ்ட் version ல் இருந்து அதற்கு முன் இருக்கும் version க்கு டவுன்கிரேட் செய்ய உதவுகின்றது.

3 Likes