i915.enable_psr=0i915.enable_psr2_sel_fetch=0 என்று இருக்க கூடாது i915.enable_psr=0 i915.enable_psr2_sel_fetch=0 என்று இருக்க வேண்டும். i915.enable_psr=0 மற்றும் i915.enable_psr2_sel_fetch=0 இடையில் இடைவெளி வேண்டும்.
I tried with space but the problem still continues(Here is the image) but when I tried without space it works like as in safe mode
Are there any problem with BIOS settings? Or within Linux?
இது i915 லினக்ஸ் டிரைவரில் உள்ள சிக்கல். கணினியை ரீபூட் செய்யவும், GRUB மெனுவில் முதல் வரியில் வைத்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும் பின் வரும் திரையில் quiet splash என்று இருக்கும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு nomodeset என்று வைத்து ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். திரையில் லாகின் செய்து சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று பார்க்கவும்.
I have already tried this solution in my previous use of Linux mint, it works(now also) but with limited resolution( 1024x768) and I have read somewhere that if this (nomodeset) is typed in grub then your pc’s performance will be low, is it?
ஆம். nomodeset ஐ தற்காலிகமாக பயன்படுத்தலாமே தவிர நிரந்தர தீர்வு அல்ல. கணினியை ரீபூட் செய்யவும், GRUB மெனுவில் முதல் வரியில் வைத்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும் பின் வரும் திரையில் quiet splash என்று இருக்கும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு systemd.unit=multi-user.target என்று கொடுத்து ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தி கண்சோல் வழியாக லாகின் செய்யவும். பின்
tail -F /sys/class/drm/card*/error &> ~/gpu-errors.log &
இந்த கமாண்டை இயக்கவும். பின்
sudo systemctl start graphical.target
இந்த கமாண்டை இயக்கவும். கணினியில் மீண்டும் சிக்கல் வரும். பின் கணினியை ரீபூட் செய்து மேலே nomodeset எப்படி செய்தோமோ அதேபோல் செய்து கணினியில் லாகின் செய்யவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
curl --data-binary @"${HOME}"/gpu-errors.log https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும். ஆனால் tail ற்கு பதிலாக sudo tail என்று கொடுக்கவும்.
இங்கே உள்ள வழிமுறையில் குறிப்பிட்டுள்ள tail கமாண்டிற்கு பதிலாக
sudo ls /; tail -F /sys/class/drm/card*/error &> ~/gpu-errors.log &
இந்த கமாண்டை இயக்கவும். பாஸ்வேர்ட் கேட்டால் லாகின் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.
மன்னிக்கவும்
sudo ls /; sudo tail -F /sys/class/drm/card*/error &> ~/gpu-errors.log &
இதை பயன்படுத்தவும்.
கணினியை ரீபூட் செய்யவும், GRUB மெனுவில் முதல் வரியில் வைத்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும் பின் வரும் திரையில் quiet splash என்று இருக்கும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு iommu=off intel_iommu=off என்று வைத்து ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். திரையில் லாகின் செய்து சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று பார்க்கவும்.
No, the login screen is not showing up
கணினியை ரீபூட் செய்யவும், GRUB மெனுவில் முதல் வரியில் வைத்து e தட்டச்சு பொத்தானை அழுத்தவும் பின் வரும் திரையில் quiet splash என்று இருக்கும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு systemd.unit=multi-user.target என்று வருமாறு தட்டச்சு செய்யவும். பின் ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். கணினி பூட் ஆகி கருப்பு நிர திரையில் லாகின் கேட்கும்.
அந்த கண்சோலில் லாகின் செய்து
sudo apt update -y && sudo apt install linux-generic-hwe-24.04-edge
இந்த கமாண்டை இயக்கவும். இது உங்கள் கர்ணலை உபுண்டுவில் உள்ள லேட்டஸ்ட் கர்ணலுக்கு மாற்றும், முடிந்தபின் கணினியை sudo systemctl reboot என்ற கமாண்டை இயக்கி ரீபூட் செய்யவும். இப்போது சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும்.
linux-generic-hwe-24.04-edge is not available in package. Only 22.04-edge available
சரி, linux-generic-hwe-24.04-edge க்கு பதிலாக linux-generic-hwe-22.04-edge பயன்படுத்தவும்.
The problem still continues
i915 டிரைவர் உங்கள் கணினிக்கு பொருந்தவில்லை, இரண்டு வழிகள் உள்ளன, நிரந்தரமாக nomodeset பயன்படுத்தி உங்கள் GPU வை பயன்படுத்தலாம். அல்லது உங்கள் கணினியை லேட்டஸ்ட் கர்ணலுக்கு மாற்றி சிக்கல் சரியாகின்றதா என்று பார்க்கலாம், உபுண்டு 24.04 மற்றும் லினக்ஸ்மிண்ட் 22.01 Xia இரண்டுமே linux-generic-hwe-24.04-edge வைத்துள்ளன, இரண்டில் ஏதேனும் ஒன்றை நிறுவி அதில் edge கர்ணல் பேக்கேஜை நிறுவி சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கலாம்.
மிகவும் புதிய கர்ணல் நிறுவ வேண்டும் என்றால் Archlinux பயன்படுத்தலாம், அல்லது நீங்களே லேட்டஸ்ட் கர்ணலை உபுண்டுவில் கம்பைல் செய்யலாம். இதில் எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, அதை பின்பற்றி பார்க்கவும்.
