Camera Not Working in Linux Mint

என்னுடைய லினக்ஸ் மின்டில் புகைப்படக் கருவி வேலை செய்யவில்லை. ஒவ்வொரு முறை கணினியைத் தொடங்கும் போதும் இந்தச் செய்தி வருகிறது. எப்படித் தீர்ப்பது? வழி சொல்லுங்களேன்.

உங்கள் இயங்குதளத்தை லேட்டஸ்ட் கர்னலுக்கு அப்டேட் செய்யவும். பின் லேஸ்டஸ்ட் கர்னலில் இந்த சிக்கல் இருக்கின்றதா என்று பார்க்கவும். அப்படி இருந்தால் பூட் செய்யும்போது Grub பூட் மெனுவில் லேட்டஸ்டிற்கு அடுத்தபடியாக இருக்கும் கர்னலில் பூட் செய்து சிக்கல் இருக்கின்றதா என்று பார்க்கவும்.

உங்கள் இயங்குதளத்தில் இருக்கும் எல்லா கர்னலையும் சோதித்தும் சிக்கல் தொடர்ந்தால் மீண்டும் லேட்டஸ்ட் கர்னலில் பூட் செய்து

for usb in $(find /sys/bus/usb/devices/ -mindepth 1 -maxdepth 1 | grep '-' | grep -v ':'); do (echo $(cat "${usb}"/idVendor):$(cat "${usb}"/idProduct),$(cat "${usb}"/version | tr -d \ ),$(cat "${usb}"/speed),$(cat "${usb}"/removable)) 2>&1 | sed 's,^,'"${usb}"':,g'; done

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும் (கமாண்ட்லைனை copy-paste செய்யவும்). வரும் தகவலை பகிரவும்.

  1. அண்மைய(லேட்டஸ்ட்) கர்னலில் ஏற்கெனவே இருக்கிறது.
  2. மீதி கர்னல்களில் பார்க்கிறேன்.
  3. இப்போதைய கர்னலில்
    /sys/bus/usb/devices/1-10:0cf3:e500,2.01,12,fixed
    என்று வருகிறது.

/sys/bus/usb/devices/1-10:0cf3:e500,2.01,12,fixed

இத்தகவல் உங்கள் கணினியில் உள்ள புளூடூத் வன்பொருள் பற்றிய தகவல். அப்படி எனில் இயங்குதளம் கேமராவை கண்டரியவில்லை.

கர்னலை மாற்றி மேலே கொடுத்துள்ள கமாண்டை இயக்கி பார்க்கவும். இதே போன்று ஒரே ஒரு வரி வந்தால் அந்த கர்னலும் கேமராவை கண்டரியவில்லை.

இப்படி சூழ்நிலை வந்தால் லேட்டஸ்ட் உபுண்டு அல்லது லேட்டஸ்ட் பெடோரா ISO வை பதிவிறக்கம் செய்து Balena Etcher வழியே ஒரு லைவ் யூஎஸ்பி உருவாக்கி அதன் மூலம் உங்கள் கணினியை பூட் செய்து இதே போன்ற சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படியும் சிக்கல் வந்தால் கிட்டத்தட்ட உங்கள் கணினியின் கேமரா பழுதாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம். மீதம் இருப்பது விண்டோஸ்தான். விண்டோசையும் இயக்கி சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

1 Like