File generated successfully but not Showing in that location

Indian income tax website provide itr excel utility ( which run only in ms office excel, contains vba) to generate json and file our income tax return. So i installed ms office through playonlinux and tried to generate json.

After completed the work while I try to generate json, it shows json generated successful and shows the file generated path. But i try to see that generated file in that path no json file created, its empty.

It shows file generated but not showing in that location. Please help how to resolve this

அது எந்த பாத்தில் சேமித்ததாக கூறியது? நீங்கள் எந்த பாத்தில் தேடிப்பார்த்தீர்கள்? எப்படி கோப்பு இல்லை என்று முடிவு செய்தீர்கள்?

இதுபோன்ற பிரச்சனை விண்டோஸ் கணினியிலும் நிகழும்.

காண்க…

இது .net framework 3.5 தொடர்பானது. அதை நிறுவி பின்பு முயற்சிக்கவும்.

தயவுசெய்து .net 3.5 எவ்வாறு linux mint-ல் நிறுவுவது என்று சொல்லவும். Wine போன்று ஏதேனும் பயன்படுத்த வேண்டுமா?

உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன,

எளிய வழி: உங்கள் கணினியில் போதுமான அளவு மெமரியும் (minimum 8GB memory) டிஸ்க் ஸ்பேசும் (mininum 50GB disk) இருந்தால் virt manager எனும் மென்பொருளை நிறுவி தாங்கள் ஒரு புதிய விண்டோஸ் விர்சுவல் மெஷினை உருவாக்கி அதில் உங்களுக்கு தேவையான விண்டோஸ் மென்பொருட்களை நிறுவிக்கொள்ளலாம்.

கடின வழி: தாங்கள் playonlinux வழியாக நிறுவிய ms office எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து அதன் வைன் பேஸ் போல்டரை கண்டரிந்து பின் அந்த வைன் போல்டரில் .Net 3.5 நிறுவ வேண்டும். இந்த வழியில் .Net 3.5 ஐ நிறுவினால் அது சரியாக வேலை செய்யும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை.

playonlinux வழிமுறையை முயற்சி செய்து பார்க்கிறேன் சகோ… எவ்வாறு அதனை செய்வது என்று வழிநடத்தவும்.

ls -ltr ~/.PlayOnLinux/wine/*

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தாமதத்திற்கு மன்னிக்கவும். தாங்கள் சொன்னது போல் செய்தேன்.

இவ்வாறு காட்டுகிறது

ls -ltr ~/.wine/*

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தாங்கள் சொன்னது போல் செய்தேன்

find ~/.PlayOnLinux/wineprefix -mindepth 1 -maxdepth 1

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தாங்கள் சொன்னது போல் செய்தேன்

sudo apt install winetricks
env WINEPREFIX=$HOME/.PlayOnLinux/wineprefix/Office2010 winetricks dotnet35

இந்த கமாண்டை இயக்கவும். அது முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் தீர்கின்றதா என்று கூறவும்.

தாங்கள் சொன்னது போல் செய்தேன் , ஒரு File உருவாகியுள்ளது, அது json format தானா என்று open செய்ய முயன்றேன் ஆனால் முடியவில்லை.



இங்கே எப்படி z: ல் சேமித்து உள்ளீர்களோ அதேபோல் சேமிக்ககவும். கோப்பின் பெயர் .json என்று முடியும். அதை லினக்சில் திறந்து அதில் உங்களுக்கு தேவையானது உள்ளதா என்று பார்க்கவும்.

அந்த file-ஐ நான் சேமித்தேன் ஆனால் அது .json ஆகா ஆகாவில்லை மாறாக .lnkவாக ஆகிறது. இன்று மீண்டும் முயற்சித்தேன் ஆனால் அது வேலை செய்யவில்லை எந்த ஒரு file-ம் உருவாகவில்லை.

Excel கோப்பில் Generate JSON என்று கிளிக் செய்யும்போது எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்று கேட்கிறதா? அப்படி கேட்கும்போது வரும் திரையை இங்கே பகிரவும்.

டெர்மினல் திறக்கவும்.

பின் வரும் கட்டளைகளை இயக்கவும்.

cd ~
find . | grep -i ITR4_LUB | grep -i json

இது உங்கள் home folder ன் உள்ள எல்லா கோப்புகளையும் பட்டியலிட்டு, அதில் ITR4_LUB என்ற பெயருள்ள கோப்புகளைக் கண்டறிந்து சொல்லிவிடும்.

இதன் result screenshot ஐப் பகிர்க.

இல்லை சகோ அவ்வாறு சேமிக்கும் option இல்லை