IBus பயன்பாட்டுச் சிக்கல் தீர்க்கும் வழிமுறை

IBus விருப்பங்கள் தேர்வு செய்து அந்த மென்பொருளை இயக்கவும்.வரும் திரையை பகிரவும்.

இந்தப் படம் வந்தது. அதன் பின்பு ஆம் என்பதைச் சொடுக்கவும்

எனும் படம் தோன்றியது.

சரி என்று கிளிக் செய்யவும். பின் வரும் திரையை பகிரவும்.

அதன் பிறகு திரையில் தோன்றும் தன்மைகள்.


சரி, இப்போது கணினியை ரீபூட் செய்யவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

pkill -9 ibus; G_DEBUG_MESSAGES=all ibus-daemon --verbose --replace --restart --timeout 1000 --cache none

இந்த கமாண்டை இயக்கவும். அதை அப்படியே ஓடவிடவும். பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி xed என்று தட்டச்சு செய்யவும். ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் வரும், பின் தட்டச்சில் Window கீயை அழுத்திக்கொண்டு பின் Space கீயை அழுத்தவும், பின் எடிட்டரில் ஏதாவது டைப் செய்யவும். எடிட்டரில் தமிழ் வருகின்றதா என்று கூறவும். அப்படி வரவில்லை எனில் மீண்டும் ஒருமுறை Window கீழை அழுத்தி Space கீயை அழுத்தவும். மீண்டும் எடிட்டரில் ஏதாவது டைப் செய்யவும். இப்போது தமிழ் வருகின்றதா என்று கூறவும்.

இரண்டு முறையும் வரவில்லை எனில் இங்கே கூறவும்.

எதுவும் செய்ய இயலவில்லை.

டெர்மினலில் copy-paste செய்துவிட்டு Enter கீயை அழுத்தினால்தான் அந்த கமாண்ட் இயங்கும். அதுவரை இயங்காது. Enter செய்துவிட்டு பின் மேலே கூறியதை செய்யவும்.

இரண்டுமுறை செய்து பார்த்தேன். ஆனாலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை.

இந்தக் காரணமும் இருக்கலாமா எனக் கூறுங்கள். முதலில் இயக்கும் பொழுது ஒரு திரையும் அதில் கீழ்ப் பலகையில் மின்கலம் நிரம்பும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்தத் திரையை இயக்க முடியவில்லை. அந்தத் திரைப்பகுதி தானாக மாறி, வேறொரு திரை வருகின்றது. அதில் மின்கலம் வலிமை குறித்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களையும் பாருங்கள். வழிகாட்டுங்கள்


மேலே உள்ள மூன்று படங்களிலும் எந்த சிக்கலும் இல்லை, கணினியை ரீபூட் செய்யவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

pkill -9 ibus; G_DEBUG_MESSAGES=all ibus-daemon --verbose --replace --restart --timeout 1000 --cache none --xim

இந்த கமாண்டை இயக்கவும் (Enter கொடுக்க வேண்டும்). பின் மீண்டும் ctrl-alt-t கொடுத்து வேரு ஒரு டெர்மினலில்

ps hup $(pgrep ibus)

இந்த கமாண்டை இயக்கவும். இரண்டாவதாக இயக்கிய கமாண்ட் கொடுத்த தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ ps hup $(pgrep ibus)
sathiya+ 2779 0.4 0.3 461808 10952 pts/0 Sl+ 21:23 0:00 ibus-daemon -
sathiya+ 2789 0.0 0.2 237776 7400 pts/0 Sl+ 21:23 0:00 /usr/libexec/
sathiya+ 2790 0.6 1.0 528964 36100 pts/0 Sl+ 21:23 0:00 /usr/libexec/
sathiya+ 2792 4.9 0.8 384816 30788 pts/0 Sl+ 21:23 0:05 /usr/libexec/
sathiya+ 2795 0.0 0.5 224652 19536 pts/0 Sl+ 21:23 0:00 /usr/libexec/
sathiya+ 2800 0.0 0.1 237712 6636 ? Sl 21:23 0:00 /usr/libexec/
sathiya+ 2819 0.0 0.2 163932 7388 pts/0 Sl+ 21:23 0:00 /usr/libexec/
sathiya+ 3271 0.4 0.5 207680 17776 pts/0 Sl+ 21:23 0:00 /usr/libexec/
sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$

தகவல் சரியானதாக இல்லை. முழு தகவலையும் இங்கே வழங்கவும். அல்லது முழூ திரையையும் பதிவு செய்து பகிரவும்.

for pid in $(pgrep ibus); do tr '\0' ' ' </proc/"${pid}"/cmdline; echo; done

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ for pid in $(pgrep ibus); do tr ‘\0’ ’ ’ </proc/“${pid}”/cmdline; echo; done
ibus-daemon --verbose --replace --restart --timeout 1000 --cache none --xim
/usr/libexec/ibus-dconf
/usr/libexec/ibus-ui-gtk3
/usr/libexec/ibus-extension-gtk3
/usr/libexec/ibus-x11 --kill-daemon
/usr/libexec/ibus-portal
/usr/libexec/ibus-engine-simple
/usr/libexec/ibus-engine-m17n --ibus
sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$

(export CLUTTER_IM_MODULE=ibus; export GTK_IM_MODULE=ibus; export QT_IM_MODULE=ibus; export XMODIFIERS=@im=ibus; xed)

இந்த கமாண்டை இயக்கவும். ஒரு எடிட்டர் வரும், பின் தட்டச்சில் Window கீயை அழுத்தி Space அழுத்தவும், பின் தட்டச்சு செய்யவும். இதேபோல் இரண்டு அல்லது மூன்று முறை Window கீயை அழுத்தி Space அழுத்தி தட்டச்சு செய்து பார்க்கவும். தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றதா என்று கூறவும்.

இல்லை.