மிக்க நன்றி, இப்பொழுது சரியாக வருகின்றது.
தோழர் இருங்கள், இனிமேல்தான் சிக்கலே உள்ளது. இப்பொழுது நாம் noto
வகை பாண்ட்டுகளை முழுவதுமாக நீக்கி முயற்சித்து பார்த்தோம் அதில் சிக்கல் தீர்கின்றது அப்படியானால் noto
வகை பாண்ட்டில்தான் சிக்கல் இருப்பதை உருதி செய்துள்ளோம்.
இப்பொழுது நம்மிடம் இரண்டு வழிகள் உண்டு,
noto
வகை பாண்ட்டுகளை முழுவதுமாக கணினியில் இருந்து அகற்றி விடுவது, நன்மை என்னவென்றால் உங்கள் சிக்கல் வராது, தீமை என்னவென்றால் வேறு சில மென்பொருட்களுக்கு தேவையான பாண்ட்டுகள்noto
வகையில் இருக்கலாம், அப்படி இருக்கும்போது அந்த மென்மொருட்களில் சிக்கல் வரலாம்.noto
வகை பாண்ட்டுகளில் எந்த பாண்ட் நம் தமிழ் எழுத்துக்களை தவராக காண்பிக்கின்றது என்று கண்டுபிடிக்க வேண்டும். நன்மை என்னவென்றால் மற்ற மென்பொருட்களில் சிக்கல் வராது, தீமை என்னவென்றால் சிக்கலை உருவாக்கும் பாண்ட்டை கண்டுபிடிக்க நேரம் தேவைப்படும்.
எந்த வழியில் முறையாக சிக்கலை தீர்க்க வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது உங்கள் கணினியில் இயங்கி கொண்டிருப்பது தற்காலிக தீர்வே.
அப்படியா, நான் GNU Free Font (Free Sans, Free Serif) தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றேன், அதனால் GUI இடைமுகங்களிலும் அவற்றை மாற்றிப் பயன்படுத்தமுடியும்.
அதனால் Noto வகையை அகற்றிப்பார்க்கின்றேன்.
அதற்கு முன் இரண்டாவது வழி என்னால் முடியுமா என்று பார்க்கின்றேன்.
அதனால் Noto வகையை அகற்றிப்பார்க்கின்றேன்
முறையாக அகற்றுங்கள். முதலில் நாம் பேக்கப் எடுத்த noto
பாண்ட்டுகளை அதன் இடத்தில் வைக்க
sudo mv ~/Downloads/noto /usr/share/fonts/truetype/
இந்த கமாண்டை இயக்கவும். பின்
dpkg --search /usr/share/fonts/truetype/noto
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
fonts-noto-mono, fonts-noto-core, fonts-noto-color-emoji, fonts-noto-ui-extra, fonts-noto-ui-core, fonts-noto-extra: /usr/share/fonts/truetype/noto
fc-cache -frv
fc-list :charset=0x0bb5 | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் இணைய இணைப்பை பகிரவும்.
mkdir ~/FontsBackup
sudo mv /usr/share/fonts/truetype/noto/Noto*Grantha*.ttf ~/FontsBackup/
fc-cache -frv
இந்த கமாண்டை இயக்கவும். பின் முன்பு வந்த சிக்கல் இப்போது வருகின்றதா என்று கூறவும்.
சிக்கல் இல்லை, இப்பொழுதும் சரியாகவே இருக்கின்றது.
அருமை, அப்படியானால் இந்த இரண்டு பாண்ட் கோப்புகள்தான் சிக்கலுக்கு காரணம். அந்த கோப்புகளை எந்த பேக்கேஜ் நிறுவுகின்றது என்பதை கண்டறிய வேண்டும், அதனால்
sudo mv ~/FontsBackup/* /usr/share/fonts/truetype/noto/
dpkg --search /usr/share/fonts/truetype/noto/Noto*Grantha*.ttf
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இவ்வாறு வருகின்றது
mv: cannot stat ‘/root/FontsBackup/*’: No such file or directory
fonts-noto-core: /usr/share/fonts/truetype/noto/NotoSerifGrantha-Regular.ttf
fonts-noto-core: /usr/share/fonts/truetype/noto/NotoSansGrantha-Regular.ttf
sudo apt purge --dry-run fonts-noto-mono fonts-noto-core fonts-noto-color-emoji fonts-noto-ui-extra fonts-noto-ui-core fonts-noto-extra
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
சரி, இப்போது
sudo apt purge fonts-noto-mono fonts-noto-core fonts-noto-color-emoji fonts-noto-ui-extra fonts-noto-ui-core fonts-noto-extra
fc-cache -frv
இந்த கமாண்டை இயக்கவும். இது noto
பாண்டுகளை முழுவதுமாக நீக்கும். பிறகு உங்கள் ஹோம் போல்டரில் தற்காலிகமாக உருவாக்கிய FontsBackup
போல்டரையும்
rmdir ~/FontsBackup
என்ற கமாண்டை இயக்கி நீக்கிவிடவும். பின் கணினியை ரீபூட் செய்து சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று உருதிபடுத்தவும்.
rmdir: failed to remove ‘/home/niroash/FontsBackup’: Directory not empty
அந்தக் கோப்புறையை நீக்க முடியவில்லை
rm -r ~/FontsBackup
இதைப் பயன்படுத்தி நீக்கிவிட்டேன்
சரி, ரீபூட் செய்து சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று உருதிபடுத்தவும்.
ஆம். தற்பொழுது சிக்கல் தீர்ந்துவிட்டது.
மகிழ்ச்சி
மிக்க நன்றி