நான் உபுண்டு லினக்சு, KDE பிளாஸ்மா 6 பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன். தமிழ் எழுத்துருக்கள் சில நேரங்களில் பெட்டிகளாகத் தோன்றுகின்றன. நான் சில தமிழ் எழுத்துருக்களை நிறுவிப் பார்த்தேன், Font Cache update செய்தும் பார்த்தேன், இன்னும் அந்தப் பிரச்சினை நீங்கவில்லை.
உலவியிலும், சில மென்பொருள்களிலும் இவ்வாறு வருகின்றது. சில எழுத்துகள் சரியாகவும் மீதி அனைத்தும் பெட்டிகளாகவும் வருகின்றன.
சில வேளைகளில் சரியாக இருக்கின்றது.
என்னுடைய இரண்டு மடிக்கணினிகளிலும் இதே பிரச்சினை இருக்கின்றது.
Ubuntu 24.04.
டெர்மினலை தவிர மற்ற அனைத்து மென்பொருட்களையும் மூடி விடுங்கள். முக்கியமாக உலவியோ அல்லது உலவயை சார்ந்த மென்பொருளோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு
FC_DEBUG=1 xdg-open https://forums.tamillinuxcommunity.org 2>&1 | tee fcdebug.log
இந்த கமாண்டை இயக்கவும். உலவி துவங்கும். பின் அதனை மூடிவிட்டு அதே டெர்மினலில்
Desired=Unknown/Install/Remove/Purge/Hold
| Status=Not/Inst/Conf-files/Unpacked/halF-conf/Half-inst/trig-aWait/Trig-pend
|/ Err?=(none)/Reinst-required (Status,Err: uppercase=bad)
||/ Name Version Architecture Description
++±==============-============-============-=================================
un msttcorefonts (no description available)