உபுண்டு லினக்சு, KDE பிளாஸ்மா 6ல் தமிழ் எழுத்துருக்கள் பெட்டிகளாகத் தோன்றும் பிரச்சினை

fonts-samyak-taml
Reverse Depends:
fonts-samyak
fonts-taml

1 Like

இந்த சிக்கல் உங்களுக்கு ஒரே ஒரு மென்பொருளில் மட்டும் வருகின்றதா? அல்லது தமிழ் தட்டச்சு செய்ய பயன்படும் அனைத்து மென்மொருட்களிலும் வருகின்றதா?

2 Likes

உலவியிலும், சில மென்பொருள்களிலும் இவ்வாறு வருகின்றது. சில எழுத்துகள் சரியாகவும் மீதி அனைத்தும் பெட்டிகளாகவும் வருகின்றன.
சில வேளைகளில் சரியாக இருக்கின்றது.
என்னுடைய இரண்டு மடிக்கணினிகளிலும் இதே பிரச்சினை இருக்கின்றது.
Ubuntu 24.04.

Kate மொன்பொருளில் இந்த சிக்கல் வருகின்றதா? அதை முயற்சித்து கூறவும்

Kate மென்பொருளில் இச் சிக்கல் வரவில்லை

டெர்மினலை தவிர மற்ற அனைத்து மென்பொருட்களையும் மூடி விடுங்கள். முக்கியமாக உலவியோ அல்லது உலவயை சார்ந்த மென்பொருளோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு

FC_DEBUG=1 xdg-open https://forums.tamillinuxcommunity.org 2>&1 | tee fcdebug.log

இந்த கமாண்டை இயக்கவும். உலவி துவங்கும். பின் அதனை மூடிவிட்டு அதே டெர்மினலில்

curl --data-binary @fcdebug.log https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கவும். அது ஒரு இணைய இணைப்பை தரும் அதை இங்கே பகிரவும்.

1 Like

இணைப்பு இதோ:
https://paste.rs/hLFfH

dpkg -l '*msttcorefonts*'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Desired=Unknown/Install/Remove/Purge/Hold
| Status=Not/Inst/Conf-files/Unpacked/halF-conf/Half-inst/trig-aWait/Trig-pend
|/ Err?=(none)/Reinst-required (Status,Err: uppercase=bad)
||/ Name Version Architecture Description
++±==============-============-============-=================================
un msttcorefonts (no description available)

dpkg --search /usr/share/fonts/truetype/msttcorefonts

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg-query: no path found matching pattern /usr/share/fonts/truetype/msttcorefonts

sudo mv /usr/share/fonts/truetype/msttcorefonts ~/Downloads/
fc-cache -frv

இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் உலவியை துவக்கி சிக்கல் நீடிக்கின்றதா என்று கூறவும்.

இப்பொழுதும் பிரச்சினை அப்படியே இருக்கிறது

கணினியை ரீபூட் செய்து முயற்சிக்கவும், சிக்கல் நீடித்தால் பின்

இங்கே குறிப்பிட்டுள்ள வழிமுறையை மீண்டும் செய்து இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

மன்னிக்கவேண்டும், இப்பொழுதும் சிக்கல் தீரவில்லை
https://paste.rs/PniQy

sudo mv /usr/share/fonts/truetype/noto ~/Downloads/
fc-cache -frv

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்து சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று கூறவும். அப்படி சிக்கல் வந்தால் மீண்டும்

இங்கே உள்ள வழிமுறையை பின்பற்றி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

1 Like

மிக்க நன்றி, இப்பொழுது சரியாக வருகின்றது.

தோழர் இருங்கள், இனிமேல்தான் சிக்கலே உள்ளது. இப்பொழுது நாம் noto வகை பாண்ட்டுகளை முழுவதுமாக நீக்கி முயற்சித்து பார்த்தோம் அதில் சிக்கல் தீர்கின்றது அப்படியானால் noto வகை பாண்ட்டில்தான் சிக்கல் இருப்பதை உருதி செய்துள்ளோம்.

இப்பொழுது நம்மிடம் இரண்டு வழிகள் உண்டு,

  1. noto வகை பாண்ட்டுகளை முழுவதுமாக கணினியில் இருந்து அகற்றி விடுவது, நன்மை என்னவென்றால் உங்கள் சிக்கல் வராது, தீமை என்னவென்றால் வேறு சில மென்பொருட்களுக்கு தேவையான பாண்ட்டுகள் noto வகையில் இருக்கலாம், அப்படி இருக்கும்போது அந்த மென்மொருட்களில் சிக்கல் வரலாம்.
  2. noto வகை பாண்ட்டுகளில் எந்த பாண்ட் நம் தமிழ் எழுத்துக்களை தவராக காண்பிக்கின்றது என்று கண்டுபிடிக்க வேண்டும். நன்மை என்னவென்றால் மற்ற மென்பொருட்களில் சிக்கல் வராது, தீமை என்னவென்றால் சிக்கலை உருவாக்கும் பாண்ட்டை கண்டுபிடிக்க நேரம் தேவைப்படும்.

எந்த வழியில் முறையாக சிக்கலை தீர்க்க வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது உங்கள் கணினியில் இயங்கி கொண்டிருப்பது தற்காலிக தீர்வே.

1 Like

அப்படியா, நான் GNU Free Font (Free Sans, Free Serif) தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றேன், அதனால் GUI இடைமுகங்களிலும் அவற்றை மாற்றிப் பயன்படுத்தமுடியும்.

அதனால் Noto வகையை அகற்றிப்பார்க்கின்றேன்.

அதற்கு முன் இரண்டாவது வழி என்னால் முடியுமா என்று பார்க்கின்றேன்.

அதனால் Noto வகையை அகற்றிப்பார்க்கின்றேன்

முறையாக அகற்றுங்கள். முதலில் நாம் பேக்கப் எடுத்த noto பாண்ட்டுகளை அதன் இடத்தில் வைக்க

sudo mv ~/Downloads/noto /usr/share/fonts/truetype/

இந்த கமாண்டை இயக்கவும். பின்

dpkg --search /usr/share/fonts/truetype/noto

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like