Kdenlive error

Kdenlive-ஐ இயக்க முயன்ற பொழுது crashed என்று வருகிறது. Uninstall செய்து மீண்டும் install செய்தாலும் இவ்வாறே வருகிறது. எவ்வாறு சிக்கலை தீர்ப்பது. உதவவும்.

  • என்ன வகையான லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துகின்றீர்கள்?
  • டெர்மினல் துவிக்கி அதில் kdenlive என்று தட்டச்சு செய்து Enterஅழுத்தவும். அந்த டெர்மினலில் தோன்றும் தகவலை இங்கே பகிரவும்.

linux mint பயன்படுத்துகிறேன். தாங்கள் சொன்னதுபோல் செய்தேன் சகோ.


flatpak list --app

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

இங்கே உள்ள தகவலை படித்து உங்கள் இயங்குதளத்தையும் கர்ணலையும் அப்டேட் செய்யவும். பின்

flatpak update

இந்த இரண்டையும் செய்துவட்டு பின் கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் kdenlive துவக்கி பார்க்கவும். சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

தாங்கள் சொன்னதுபோல் செய்தேன். ஆனாலும் சரியாகவில்லை. சகோ. மீண்டும் அவ்வாறே வருகிறது

flatpak run org.kde.kdenlive

இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும். மீண்டும crash ஆகும். ஆகிவிட்ட பின் டெர்மினலில் இருக்கும் தகவலை இங்கே பகிரவும்.

தாங்கள் சொன்னதுபோல் செய்தேன் சகோ.

lspci -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo lspci -v -s 0000:00:01.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

coredumpctl | grep kde

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

coredumpctl info 17885 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கவும். வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

echo 'GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash module_blacklist=radeon"' | sudo tee /etc/default/grub.d/60-disable-radeon.cfg; sudo update-grub

இந்த கமாண்டை இயக்கவும். கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் kdenlive துவக்கவும். சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

தாங்கள் சொன்னதுபோல் செய்தேன். சிக்கல் தொடர்கிறது.