Linux Boss 3.22.2 ல் Panel Position எவ்வாறு மாற்றுவது?

இப்போது Menu Top Position ல் உள்ளது

தங்கள் திரையை பகிரவும். அப்போதுதான் எந்த டெஸ்க்டாப் என்விராண்மன்டில் உள்ளீர்கள் என்று பார்க்க முடியும்.

1 Like

https://extensions.gnome.org/extension/4764/bottompanel/

இந்த இணைப்புக்கு firefox பிரவ்சர் வழியாக செல்லுங்கள். அங்கு On/Off என்று வரும் இடத்தில் On வருமாறு வைக்கவும். தாங்கள் எதிர்பார்த்த்து நடக்கின்றதா என்று பார்க்கவும்.

1 Like

firefox ல் ctrl-shift-a கொடுத்தால் Extensions பக்கம் வரும். அதை பகிரவும்.

தங்கள் திரையில் வலது மேல் மூலையில் Applications என்பதை தேர்வு செய்து search box ல் terminal என்று டைப் செய்து வரும் டெர்மினல் மென்பொருளை இயக்கவும். அதில் இந்த கமாண்டை உள்ளிடவும் பாஸ்வேர்டு கேட்டால் தற்போது லாகின் செய்யப்பட்டுள்ள பயனரின் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

sudo apt update -y; sudo apt upgrade -y; sudo apt autoremove --purge -y; sudo apt clean -y

முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும். பின்பு இங்கே கூறவும்.

நல்லது தோழர்!
செய்துவிட்டு பகிர்கிறேன்!

அடுத்து என்ன செய்வது சகோ?
திரை நிற்கிறதே!!

சரி, இப்பது தங்கள் கணினியை ரீபூட் செய்யவும். பின் லாகின் செய்து firefox ஐ துவக்கவும்.

இப்போது https://extensions.gnome.org செல்லவும். வரும் திரையை பகிரவும்.

சரி, இப்போது “Click here to install browser extension” என்பதை கிளிக் செய்யவும். எக்ஸ்டென்ஷன் ஒன்று நிருவ கேட்கும். அதன்படி நிருவவும். பின்பு வரும் திரையை பகிரவும்.

சரி, firefox ஐ மூடிவிட்டு மீண்டும் துவக்கவும். பிறகு Bottom Panel - GNOME Shell Extensions இணைப்புக்கு செல்லவும். வரும் திரையை முழுமையாக பகிரவும்.