Linux mint os not openning

முன்பே லினக்ஸ் மிண்ட் நிறுவப்பட்டு பயன்படுத்தி வந்த கணினியா? அல்லது புதிதாக லினக்ஸ் மிண்ட் நிறுவப்பட்ட கணினியா?

yes, already I have used Windows 10 and Linux Mint with dual boot options.

கணினியை ரீபூட் செய்யவும். பின் விண்டோஸ்/லினக்ஸ் தேர்வு செய்யும் திரை (Grub menu) வரும் Down Arrow அழுத்தவும். பின் மீண்டும் லினக்ஸ் வரியை தேர்வு செய்யவும். வரும் திரையை பகிரவும்.

Recently my SSD has been corrupted. so I had an os linux mint only

இது பெண்டிரைவ் வழியாக பூட் செய்த திரையா? அல்லது கணினியில் உள்ள டிஸ்கின் வழியாக பூட் செய்யப்பட்ட திரையா?

pendrive

மேலே நிழற்படத்தில் உள்ள சிக்கல் பெண்டிரைவ் வழியாக பூட் செய்யும்போது வருகின்றதா?

after booting its works , but if shutdown and then restarts its showing like this

இங்கே உள்ள சிக்கல் எப்போது வருகின்றது? லினக்ஸ் முன்பே நிறுவி விட்டீர்கள் எனில்

இங்கே ஏன் பெண்டிரைவில் பூட் செய்தீர்கள்? Linux mint os not openning - #4 by mohan43u இங்கு நான் பெண்டிரைவில் பூட் செய்யும்படி கூறவே இல்லையே?

லினக்ஸ் முன்பே நிறுவி விட்டீர்கள் எனில் பெண்டிரைவை கணினியில் இருந்து எடுத்துவிட்டு அதை தூரமாக வைத்துவிட்டு கணினியை பூட் செய்யவும். அப்போது Grub Menu வருகின்றதா என்று கூறவும்.

Grub menu வரவில்லை. இந்த படம் வருகிறது.

சில சமயங்களில் இந்த படம் வருகிறது.

இதை தான் நான் எதிர்பார்த்தேன், இங்கே இரண்டாவது வரியை தேர்வு செய்யவும் வரும் திரையை பகிரவும்

அருமை, இப்போது மூன்றாவது வரியை தேர்வு செய்து வரும் திரையை பகிரவும்.

மூன்றாவது வரியை தேர்வு செய்தால் இந்த படம் வருகிறது

உங்கள் கடவுச்சொல்லை (password) கொடுத்து உள்ளே செல்லவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் திரையில்

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

sudo update-initramfs -u -k all && sudo update-grub

இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.