என்னுடைய mic linux mint ல் வேலை செய்யவில்லை?

நான் நீங்கள் கூறியதை போன்று linux kernel ஐ update செய்துவிட்டேன். நான் பயன்படுத்தும் மடிக்கணிணியில் ஒரே ஒரு 3.5mm audio jack மட்டுமே உள்ளது என்னுடைய mic jbl நிறுவனத்தின் cslm20 model என்னது மடிக்கணிணியின் விவரங்கள் இந்த link https://termbin.com/3wan8 ல் உள்ளது. இந்த பக்கத்தில் Microphone not detected in my pc - #3 by Boopalan கூறியதை போன்று நான் 50 % மற்றும் 75 % என வைத்து சோதித்தேன் இரைச்சல் மட்டுமே கேட்டது. இப்போதும் Kernel: 5.15.0-41-generic update க்கு பிறகும் அதே நிலைதான் .

(pactl info; pactl list sources) 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை இங்கே பகிரவும்.

https://paste.rs/CEO

analog-input-mic: Microphone (priority: 8700, not available)

தங்கள் மைக் சரியாக இணைக்கப்படவில்லை, இனைத்திருந்தால் not available க்கு பதிலாக available என்று வந்திருக்கும்.

சரியாக இணைத்துவிட்டு available என்று வருகின்றதா என்று பார்க்கவும். available என்று வந்தும் அதே சிக்கல் இருந்தால் மீண்டும் இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும்

(pactl info; pactl list sources) 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இது ஒரு earphone உடன் கூடிய mic. இந்த mic சார்ந்த தகவலை லிங்கில் இணைத்துள்ளேன் JBLCSLM20 | Lavalier Microphone with Earphone. இதுவும் analog-input-mic ல் கட்டுமா ?

அதை காட்டாது. 3.5mm port ல் ஏதேனும் சரியாக இணைக்கப்பட்டு இருந்தால் available என்று காட்டும். மற்றபடி வேறு எதையும் காட்டாது.

நான் சிலமுறை கழற்றி மாற்றி பார்த்துவிட்டேன். என்னிடம் உள்ள வேறு ear phone connect செய்து பார்த்தேன் இருந்த போதும் not avaliable வருகிறது. sound>>device இல் headphone bulit in audio காண்பிக்கிறது. ear phone ல் பாடல்கள் கேட்கமுடிகிறது.

வேறு ஒரு ஹெட்செட் பயன்படுத்தும்போது அதில் மைக் வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

இல்லை

தங்களிடம் விண்டோஸ் டூயல் பூட் இருந்தால் அதில் 3.5mm port சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

Windows 10 உள்ளது அதில் வேலை செய்கிறது

லின்க்சில் மைக்கை இணைத்துவிட்டு இந்த கமாண்டை இயக்கவும்

pactl set-source-port 1 analog-input-mic
pactl set-source-volume 1 50%

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கி தங்கள் சிக்கல் சரியாகின்றதா என்று பார்க்கவும்.

எந்த ஒரு சத்தமும் பதிவாகவில்லை Janus WebRTC Server (multistream): Echo Test இந்த பக்கத்தில் சென்று சோதித்தபோதும் இப்படி வருகிறது கீழே புகை படத்தி உள்ளதுபோல்.

pactl list sinks 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

https://paste.rs/Jqi

amixer scontents

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இந்த லிங்கில் பதிவிட்டுளேன் https://paste.rs/Q01

amixer sset 'Internal Mic Boost',0 0
amixer sset 'Internal Mic',0 15
amixer sset 'Capture',0 33

இந்த கமாண்டுகளை இயக்கி பிறகு மைக் சரியாக வேலை செய்கின்றதா என்று சோதித்து பார்க்கவும்.

எந்த ஒரு சத்தமும் பதிவாகவில்லை. Janus WebRTC Server (multistream): Echo Test இந்த பக்கத்தில் சென்று பார்த்த போதும் எந்த ஒரு மாற்றமும் இல்லை

“ webRTC error… the object can not be found here “ இது போன்று மட்டுமே வருகிறது

gst-launch-1.0 autoaudiosrc ! autoaudiosink

இந்த கமாண்டை இயக்கவும். பின் பேசவும். இப்போது ஒலி கேட்கின்றதா என்று பார்க்கவும். கமாண்டை முடிக்க ctrl-c கொடுக்கவும்.