Microphone not detected in my pc

நான் என்னுடைய microphone ஐ கணினியில் sound record செய்ய முயற்சித்தேன் அனால் எந்த சத்தமும் பதிவாகவில்லை நான் sound settings இல் பார்த்தபோது output device இல் headphone build-in audio என்பது போல் காட்டுகிறது அனால் input சென்று பார்க்கும்போது internal audio built in microphone என்று காட்டுகிறது என்னுடைய கண்ணினியின் specs கீழே உள்ள link இல் https://termbin.com/1ujo

Sound setting ல் recording Device ன் volume அளவு என்ன?

அது mute செய்யப் பட்டுள்ளதா?

அதன் screenshot பகிர்க.

mute செய்யபடவில்லை கீழே screenshot ஐ பகிர்ந்துளேன்

மைக்கை 75% வைத்துவிட்டு முயற்சி செய்து பார்க்கவும்.


நீங்கள் கூறியவாறு நான் செய்துள்ளேன் ஆனாலும் நான் online வகுப்பில் எனது கணினியின் மூலம் இணையும் பொழுது நான் பேசுவதை மற்றவர்களால் கேட்க இயலவில்லை அவர்களால் இரைச்சலை மட்டுமே கேட்க முடிகிறது

https://janus.conf.meetecho.com/echotest.html

sound settings ஐ துவக்கி வைத்துவிட்டு பிரவுசரில் இத்தளத்திற்கு செல்லுங்கள். பின் பேசுங்கள். தாங்கள் பேசுவது சற்று இடைவெளி விட்டு மீண்டும் கேட்கும். தங்கள் மைக் வால்யூமை சரி செய்தவாரே பேசுங்கள். எப்பொழுது இரைச்சல் இல்லாமல் உள்ளதோ அப்போது நிருத்துங்கள். அதுவே உங்கள் சரியான மைக் வால்யூம்.

1 Like


நீங்கள் மேலே கூறிய இணையதளத்திற்கு சென்று முயற்சித்துப் பார்த்தேன் ஆனால் இந்த தளத்தில் என்னால் எந்த ஒரு ஒலியையும் கேட்க இயலவில்லை எனது கணினியில் webcam இல்லை

தாங்கள் பேசும்போது Input Level ல் ஏதேனும் மாற்றம் தெரிகின்றதா?

1 Like

இல்லை நிசப்தமாகவே உள்ளது

இல்லை input level ல் எந்த ஒரு மாற்றமும் இல்லை

இதற்கு ஏதேனும் வழிமுறை உள்ளதா சரி செய்வதற்க்கு

Earphone அல்லது headphone இணைத்து சோதியுங்கள்.

Inbuilt mic பழுது ஆயிருக்கலாம்.

1 Like

பழுது ஏற்பட்டிருந்தால் அதை எப்படி உறுதி செய்வது

Earphone இணைத்தால் நன்றாக வேலை செய்கிறது?

இரைச்சல் மட்டுமே ஏற்படுகிறது நான் பேசுவதை மற்றவர்களால் கேட்க இயலவில்லை

முழு பதில் தருக.

Earphone இணைத்தாலும் அதே சிக்கல் தானா ?

Earphone இணைந்தால் மட்டுமே இரைச்சல் கேட்கிறது earphone இணைக்கவில்லை என்றால் cpu வில் இருக்கும் speaker ல் மற்றவர்கள் பேசுவது தெளிவாக கேட்கிறது ஆனால் நான் பேசுவது மற்றவர்களுக்கு கேட்கவில்லை

try the solution here

sudo su

echo 0 > /sys/module/snd_hda_intel/parameters/power_save 
1 Like

Earphone ஐ earphone port ல் சொருகினால் சரியாக வேலை செய்கிறது அதாவது Audio and video கேட்க முடிகிறது ஆனால் microphone port ல் சொருகினால் எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவதை கேட்க இயலவில்லை அதேபோல் நான் பேசுவதை அவர்களால் கேட்க இயலவில்லை அவர்களுக்கு எனது microphone ல் இருந்து இரைச்சல் மட்டுமே கேட்கிறது

எத்தனை port உள்ளன?

படம் பிடித்து அனுப்புங்கள்.

1 Like