My laptop open only black screen in linux

my laptop open only black screen in linux

கருப்பு திரையை நிழற்படம் (photo) எடுத்து அனுப்பவும்

Blockquote

@Deepak_E it seems like a video🤔
What exactly the issue?

லினக்‌ஸ் துவங்கும்போது grub திரை வருகின்றதா?


இப்படி வந்தால் எவ்வலவு நேரம் இந்த திரை நீடிக்கின்றது? அப்படி இந்த திரை வரும்போது கீபோர்டில் Up Arrow அல்லது Down Arrow அழுத்தி திரையை மேலும் முன்னேற விடாமல் தடுக்கவும். பின் நிழற்படம் (Screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

5 second irukku up arrow down arrow aluthana
athe page la iruku

சரி, இப்படி திரை வந்தவுடன் முதல் வரியில் வைத்து e என்று தட்டச்சில் அழுத்தவும். பின் வரும் திரையில் quiet மற்றும் splash என்ற வார்த்தைகள் எந்தெந்த வரிகளில் உள்ளதோ அந்த வரிகளுக்கு சென்று அவற்றை அழித்துவிடவும். பின் ctrl-x என்று தட்டச்சில் அழுத்தவும். இப்போது திரையில் ஏதேனும் தோன்றுகின்றதா என்று பார்க்கவும். அப்படி ஒரு இடத்தில் நின்றால் அந்த திரையை நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும்.

இங்கே கூறி உள்ளபடி quiet மற்றும் splash என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு ctrl-x அழுத்தும்முன் திரையை நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும்.

தோழர், linux என்று துவங்கும் வரியில் உள்ள quiet மற்றும் splash என்ற வார்த்தைகளை மட்டும்தான் நீக்க சொன்னேன். முழூ வரியையும் நீக்க சொல்லவில்லை. அந்த வார்த்தைகளை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.

Black screen tha varuthu

linux என்று தொடங்கும் வரியில் quiet மற்றும் splash என்ற வார்த்தைகளை அழித்துவிட்டு loglevel=7 என்று கொடுக்கவும். பின் திரையை நிழற்படம் எடுக்கவும். அதை இங்கே பகிரவும். பின் ctrl-x என்று அழுத்தி திரையில் ஏதேனும் தெரிகின்றதா என்று பார்க்கவும். அப்படி ஏதேனும் வந்தால் அதை நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும்.

White line black screen tha varuthu

loglevel=7 என்பதற்கு பதிலாக nomodeset loglevel=7 என்று வைக்கவும். இப்போது மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.

linux என்று தொடங்கும் வரியில் quiet splash க்கு பதிலாக nomodeset i915.modeset=0 nouveau.modeset=0 loglevel=7 systemd.unit=multi-user.target இதை கொடுத்து முயற்சித்து பார்க்கவும்.