Os installation problem

Windows la edum try panni pakalama?

சரி, மீண்டும் கணினியை ரீபூட் செய்து லினக்ஸ் மிண்ட் லைவ் என்விராண்மண்ட் வரவும். பின்

sudo mkfs -t ext4 /dev/nvme0n1p2
sudo mount /dev/nvme0n1p2 /mnt
bs=$(blockdev --getbsz /dev/nvme0n1p2)
sudo dd if=/dev/sda1 of=/mnt/linuxmint.iso bs=${bs} status=progress
sudo umount /mnt

இந்த கமாண்டுகளை இயக்கவும். இவைகளை இயக்கி முடிந்த பின்போ அல்லது இவைகளை இயக்கும்போது ஏதேனும் சிக்கல் வந்தாலோ இருக்கும் திரையை பகிரவும்.

விண்டோசில் உதவ இங்கே எதுவும் இல்லை. இது லின்கஸ் சிக்கல்களை தீர்க்க உருவாக்கப்பட்ட குழு ஆகும்.




sudo mount | grep nvme

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo umount --all-targets --recursive /dev/nvme0n1p2
sudo mkfs -t ext4 /dev/nvme0n1p2
bs=$(sudo blockdev --getbsz /dev/nvme0n1p2)
sudo mount /dev/nvme0n1p2 /mnt
sudo dd if=/dev/sda1 of=/mnt/linuxmint.iso bs=${bs} status=progress
sudo umount /mnt

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.






சரி, இப்போது டெர்மினலை முழு திரையும் ஆக்கிரமிக்கும்படி செய்யவும் (Maximize Terminal Window). பின் டெர்மினலில்

tail -f /var/log/syslog

இந்த கமாண்டை இயக்கவும், பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Install Linux Mint என்று தட்டச்சு செய்யவும் அப்போது Install Linux Mint என்று திரையில் வரும், அதை கிளிக் செய்தால் இண்ஸ்டாலர் துவக்கப்படும். இண்ஸ்டாலரை நன்றாக மேலே இழுத்துவிடவும் (டெர்மினலின் கீழ் பகுதி நன்றாக தெரியும்படி செய்யவும்). பின் முன்புபோல் சிக்கல் வரும் வரை முன்னேறவும். சிக்கல் வந்தவுடன் முழு திரையும் தெரியும்படி திரைபதிவு எடுத்து இங்கே பகிரவும்.


Iso installation try panna piragu
sudo tar cvzf - /var/log | base64 -w0 | curl --data-binary @- https://bashupload.com
Comment ku vandha result


Pothum bro we will stop here,mudila

Thanks for your knowledge sharing

Give me one clarification, enna problem uh irukalam

முயற்சி திருவினையாக்கும் தோழர். மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம்

  1. வேறு ஒரு நல்ல பெண்டிரைவை எடுத்துக்கொள்ளவும் (USB3 இருந்தால் நல்லது), அதில் https://www.balena.io/ வழியாக லினக்ஸ் மிண்ட் லைவ் USB உருவாக்கவும்.
  2. உங்கள் கணினியில் தற்போது பயன்படுத்தும் USB போர்டுக்கு பதிலாக வேறு ஒரு USB போர்டில் (USB3 போர்டாக இருந்தால் நல்லது) அந்த USB ஐ உள்ளிடவும்.
  3. மீண்டும் லினக்ஸ் மிண்ட் லைவ் என்விராண்மெண்டில் டெர்மினல் துவக்கி (ctrl-alt-t) பெரிதாக்கவும். பின் அதில் tail -f /var/log/syslog துவக்கவும்.
  4. லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Install Linux Mint தட்டச்சு செய்து Installer ஐ துவக்கவும்.
  5. சிக்கலை மீண்டும் உருவாக்க முயற்சிக்கவும். சிக்கல் மீண்டும் வந்தால் முழு திரையை பகிரவும்.

இப்பொழுதும் இதே போல் சிக்கல் வந்தால் நேரடியாக /var/log/syslog ஐ மாணிட்டர் செய்தால் மட்டுமே எங்கு தவறு நடைபெறுகின்றது என்று கூற முடியும். அப்படி நேரடியாக மாணிட்டர் செய்வது சிறிது கடினம், எனவே அப்போது முயற்சியை கைவிடுவோம்.

Ok bro

சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.