லினக்ஸ் எங்கு எப்படி ஆரம்பிக்கலாம்?

நான் லினக்ஸ் பயில விரும்புகிறேன். இலவசமாக அடிப்படையிலிருந்து எங்கு எவ்வாறு ஆரம்பிப்பது?

4 Likes

தங்களிடம் லினக்ஸ் மிண்ட் இயங்குதளம் உள்ளதா? இல்லை எனில் அதை முதலில் தங்கள் கணினியில் நிறுவவும்.

பின்பு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்தால் இந்த புத்தகங்களை படிக்க முயற்சிக்கவும்

எளிய தமிழில் லினக்ஸ் - பாகம் 1
எளிய தமிழில் லினக்ஸ் - பாகம் 2
துருவங்கள்

1 Like

ஆம். டூயல் பூட் மூலம் என் மடிக்கணினியில் நிறுவியுள்ளேன்.

மகிழ்ச்சி, முன்பே குறிப்பிட்டுள்ள புத்தகங்களை பார்க்கவும். எளிய தமிழில் லினக்ஸ் இரண்டு பாகங்களும் லினக்ஸ் மற்றும் அதன் கமாண்டுகளை விரிவாக பேசும். துருவங்கள் ஒரு நாவல் வழியாக லினக்ஸ் பற்றிய அறிமுகத்தை கொடுக்கும்.

1 Like

இன்றிலிருந்து பயில ஆரம்பித்துள்ளேன். கிட்டிலும் எனது செயல்முறைகளை பதிவேற்றம் செய்கிறேன்.

தங்களின் லினக்ஸ் கற்கும் அனுபவத்தை ஒரு பிளாக் உருவாக்கி அங்கே பதிவு செய்யவும். பிற்காலத்தில் நீங்கள் எப்படியெல்லாம் லினக்ஸ் கற்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள அது உதவியாக இருக்கும்.

பிளாக் இலவசமாக உருவாக்க https://wordpress.com தளத்தை பயன்படுத்தலாம்.

நான் வேலை செய்துக்கொண்டு பயில்வதால் நேரமின்மை காரணமாக வலைப்பூ எழுத கடினமாக உள்ளது. எனினும் கையேட்டில் எழுதி வைத்துள்ளேன். விரைவில் வலைப்பூவாகவும் பதிவேற்றம் செய்கிறேன்.

1 Like