விசைப்பலகை தானாகவே இயங்குகிறது - லினக்ஸ் மின்ட்

கடந்த சில நாட்களாகத் திடீர் திடீரென [எப்போதும் இல்லை] விசைப்பலகையின் - குறியீடு தானாகவே அச்சாகிறது. ஒருவேளை ‘-’ விசை அழுத்தப்பட்டிருக்குமோ என்று பார்த்து விட்டேன். அப்படி எதுவும் இல்லை. அதுவும் எப்போதும் அச்சாவதில்லை. திடீர் திடீரென தொடர்ந்து --------------------- என அச்சாகிக் கொண்டே போய் விடுகிறது. லினக்ஸ் மின்டின் அப்டேட் மேனேஜர், கர்னல் ஆகியனவற்றையும் இற்றைப்படுத்தி விட்டேன். சிக்கல் தீரவில்லை.

இது ஏதாவது மென்பொருள் சிக்கலாக இருக்குமா? இல்லை விசைப்பலகை சிக்கல் தானா?

#keyboard #linuxmint

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Preferences சென்று அதில் Keybaord என்பதை தேர்வு செய்யவும் அதில் Enable key repeat என்பது ஆன் செய்யப்பட்டு உள்ளதா என்று பார்க்கவும். அப்படி ஆன் செய்யப்பட்டிருந்தால் Repeat delay என்பதை குறைக்கவும். கணினியை ரீபூட் செய்யவும். பின் மீண்டும் இதே சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

சிக்கல் தீரவில்லை எனில் வேறு ஒரு எக்ஸ்டர்னல் கீபோர்ட் பயன்படுத்தினால் சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று பார்க்கவும்.

எக்ஸ்டர்னல் கீபோர்ட் பயன்படுத்தியும் சிக்கல் வருகின்றது என்றால் சாப்ட்வேர் சிக்கல், எக்ஸ்டர்னல் கீபோர்ட் பயன்படுத்தும்போது சிக்கல் வரவில்லை எனில் ஹார்ட்வேர் சிக்கல். சாப்ட்வேர் சிக்கல் வந்தால் மீண்டும் இங்கே கூறுவும்.

1 Like

கீழுள்ளவற்றைச் செய்து பார்த்தேன். சிக்கல் தீரவில்லை.

 1. Repeat Delayஐக் குறைத்து வைத்தேன்.
 2. வெளிப்புற விசைப்பலகை இணைத்தும் முயன்றேன்.

கூடுதலாகக் கணினியைத் தொடங்கும் போது தொடர்ந்து சத்தம் வருகிறது. ஒவ்வொரு முறையும் எஃப்12 அழுத்தித் தான் உள்ளே நுழைய முடிகிறது. உள்ளே நுழையும் போதே கடவுச் சொல்லைக் கொடுக்க முடியாத படி, பல சமயங்களில் [எல்லாச் சமயங்களிலும் இல்லை] ‘-’ தொடர்ந்து அச்சாகி விடுகிறது.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

uname -a
grep vmlinuz /boot/grub/grub.cfg
lspci -vt

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Linux muthu-Lenovo-IdeaPad-S340-15IWL 6.5.0-14-generic #14~22.04.1-Ubuntu SMP PREEMPT_DYNAMIC Mon Nov 20 18:15:30 UTC 2 x86_64 x86_64 x86_64 GNU/Linux

linux	/boot/vmlinuz-6.5.0-14-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-6.5.0-14-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-6.5.0-14-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-91-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-91-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-89-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-89-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-88-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-88-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-83-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-83-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-79-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-79-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-76-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-76-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-71-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-71-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-70-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-70-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-69-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-69-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-67-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-67-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-60-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-60-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-58-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-58-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-57-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-57-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-56-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-56-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 
	linux	/boot/vmlinuz-5.15.0-41-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro quiet splash 
	linux	/boot/vmlinuz-5.15.0-41-generic root=UUID=b013b16e-21e0-4354-a175-c68c1e6ef135 ro recovery nomodeset dis_ucode_ldr 

-[0000:00]-±00.0 Intel Corporation Coffee Lake HOST and DRAM Controller
±02.0 Intel Corporation WhiskeyLake-U GT2 [UHD Graphics 620]
±04.0 Intel Corporation Xeon E3-1200 v5/E3-1500 v5/6th Gen Core Processor Thermal Subsystem
±08.0 Intel Corporation Xeon E3-1200 v5/v6 / E3-1500 v5 / 6th/7th/8th Gen Core Processor Gaussian Mixture Model
±12.0 Intel Corporation Cannon Point-LP Thermal Controller
±14.0 Intel Corporation Cannon Point-LP USB 3.1 xHCI Controller
±14.2 Intel Corporation Cannon Point-LP Shared SRAM
±15.0 Intel Corporation Cannon Point-LP Serial IO I2C Controller #0
±15.1 Intel Corporation Cannon Point-LP Serial IO I2C Controller #1
±15.2 Intel Corporation Device 9dea
±16.0 Intel Corporation Cannon Point-LP MEI Controller #1
±17.0 Intel Corporation Cannon Point-LP SATA Controller [AHCI Mode]
±1d.0-[01]----00.0 Realtek Semiconductor Co., Ltd. RTS522A PCI Express Card Reader
±1d.2-[02]----00.0 Qualcomm Atheros QCA9377 802.11ac Wireless Network Adapter
±1d.4-[03]----00.0 Samsung Electronics Co Ltd NVMe SSD Controller SM981/PM981/PM983
±1f.0 Intel Corporation Cannon Point-LP LPC Controller
±1f.3 Intel Corporation Cannon Point-LP High Definition Audio Controller
±1f.4 Intel Corporation Cannon Point-LP SMBus Controller
-1f.5 Intel Corporation Cannon Point-LP SPI Controller

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sed '/^#/d;/^ *$/d' /etc/default/grub

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

GRUB_DEFAULT=0
GRUB_TIMEOUT_STYLE=hidden
GRUB_TIMEOUT=0
GRUB_DISTRIBUTOR=lsb_release -i -s 2> /dev/null || echo Debian
GRUB_CMDLINE_LINUX_DEFAULT=“quiet splash”
GRUB_CMDLINE_LINUX=“”

sudo sed -i.bak '/GRUB_TIMEOUT_STYLE=/d;/GRUB_TIMEOUT=/s/.*/GRUB_TIMEOUT=5/g' /etc/default/grub
sudo update-grub

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். முடிந்தபின் ரீபூட் செய்யவும். Grub Menu வரும்போது Advanced options என்ற வரியை தேர்வு செய்து அதன்பின் மூன்றாவது வரியை தேர்வு செய்யவும் (அதாவது, தற்போதைய புதிய கர்ணலை விட்டுவிட்டு அதற்கு முன்பு இருந்த கர்ணலை பயன்படுத்தி பூட் செய்வது).

பின் கீபோர்ட் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும். முயற்சியின் பலனை இங்கே கூறவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இப்போது சரியாக இருக்கிறது. மிக்க நன்றி!

எப்படி இதை சரிசெய்தீர்கள் என்பதை கூறினால் உதவியாக இருக்கும்.

:slight_smile: தலைவா! நீங்கள் சொன்னவற்றைப் பின்பற்றினேன். அவ்வளவு தான்! நீங்கள் கடைசியாகச் சொன்னபடியே பழைய லினக்ஸ் கர்னல் கொண்டு ஒரு முறை உள்நுழைந்தேன். பிறகு சரியாகி விட்டது.

பழைய கர்ணலை நம்பியே எப்பொழுதும் இருக்க இயலாது. ஒவ்வோரு முறையும் தாங்கள் பூட் செய்யும்போது Grub Menu வில் மூன்றாவது வரியை தேர்வு செய்து உள் நுழைய வேண்டி இருக்கும்.

லினக்ஸ் மிண்டில் லாகின் செய்துவிட்டு பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி update manager தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கி அப்டேட் ஏதேனும் இருந்தால் அப்டேட் செய்துவிடவும்.

அப்டேட்கள் முடிந்தபின் அதே அப்டேட் மேனேஜரில் View -> Linux Kernels செல்லவும். Continue கேட்டால் Continue கொடுக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.

உங்களால் இந்த சிக்கல் இல்லாமல் புதிய கர்ணலுக்கு முன்னேற முடிகின்றதா என்று பார்க்கவும். சிக்கல் வந்தால் கூறவும்.


புதிய கெர்னலுக்கு முன்னேற முடிகிறது. சிக்கலும் இப்போது இல்லை.

ஓர் ஐயம். பழைய கெர்னல்கள் பல, installed என இருக்கின்றன. அவற்றை நீக்கிவிடலாமா?

அவற்றை நீக்கிவிடலாமா?

ஆம், நீண்ட நாட்கள் சப்போர்ட் கிடைக்கின்ற ஸ்டேபில் கர்ணல் வரிசையில் ஒன்றையும் (தற்போதைய 5.x.x வரிசையில் லேட்டஸ்டாக உள்ள கர்ணல்), மிகவும் புதிய கர்ணல் ஒன்றையும் (தற்போதைய 6.x.x வரிசையில் லேட்டஸ்ட்டாக உள்ள கர்ணல்) மட்டும் வைத்துக்கொண்டு மற்ற கர்ணல்களை நீக்கிவிடவும். பின் ரீபூட் செய்து லேட்டஸ்ட் கர்ணலை பயன்படுத்தவும்.

1 Like