டெர்மினலில் தமிழ் தெரிய வைப்பது எப்படி?

பொதுவாக லினக்ஸ் டெர்மினலில் தமிழ் சரியாகத் தெரிவதில்லை.

konsole ல் இப்படித் தெரிகிறது.

உபுண்டு டெர்மினலிலும் இப்படித்தான்.

ஆனால், ஈமேக்ஸ் Emacs Eshell ல் மட்டும் அட்டகாசமாகத் தெரிகிறது.

ஆனால், இங்கு
https://www.mail-archive.com/ubuntu-l10n-tam@lists.ubuntu.com/msg00830.html
கா. சேது அவர்கள் mlterm எனும் டெர்மினலிலும் தமிழ் சரியாகத் தெரிவதாய் சொல்லியுள்ளார்.

முயன்றேன். பயனில்லை.

யாரேனும் அதில் முயன்று பார்க்க இயலுமா?

https://wiki.archlinux.org/title/Mlterm
https://mlterm-dev-en.narkive.com/V5PDCNIR/how-to-set-font-of-mlterm

அதில் noto tamil font பயன்படுத்துவது எப்படி?

வேறு ஏதாவது டெர்மினலில் தமிழ் சரியாகத் தெரிகிறதா?

@tshrinivasan ubuntu டர்மினலில் பொதுவாக Fonts Monospaced ஆக இருக்க வேண்டும். மேலும் டர்மினலில் encoding UTF-8 இருந்தால், வேர்ரொரு unicode encoding ஆக மாற்றி Font’ஐ Monospaced
இல்லாத Font ஆக வைத்து முயலவும்.

@VigsVj நீங்கள் அதை முயன்று விட்டு, என்ன எழுத்துருகள் பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்ல வேண்டுகிறேன்.

தமிழ் எழுத்துருக்கள் பொதுவாக monospaced ஆகா வருவதில்லை, இதற்க்கு காரணம் தமிழ் எழுத்துக்களின் வடிவமே. Monospaced முறையில் எழுத்துக்கள் அகலமும் உயரமும் , எழுத்துக்கள் இடையே உள்ள இடைவெளியும் ஒரே அளவாக இருக்கும் அதனால் terminal இற்கு ஏற்ற வகையில் இருக்கும். Mlterm எனக்கு புதிது, முயன்று பார்கின்றேன்.

mlterm இவ்வாறு நிறுவினென் வேலை செய்கிறது:

முதலில் இந்த சார்புகளை நிருவவும்:

$ sudo apt-get install libharfbuzz-dev libgtk-3-dev libfreetype6-dev libcairo2-dev

Noto Sans Tamil Google Fonts இல் இருந்து பதிவிரக்கி நிறுவிக்கொள்லவும். உதவிக்கு இதை பார்க்கவும் Font Install

பிறகு mlterm’ஐ நகல் எடுத்துக்கொள்ளவும், பின்பு mlterm கொப்புறைக்குள் புகுந்து, உள்ளமைத்து, உருவக்கி, நிறுவிக்கொள்ளவும்

$ git clone https://github.com/arakiken/mlterm.git
$ cd mlterm
$ ./configure
$ make; sudo make install

இப்பொழுது mlterm துவங்கினால் புதிய டர்மினல் தொடங்கும். இவ்வறு தொடங்கவும்:

$ ./main/mlterm -otl

பிறகு இவ்வாறு திரை இருக்கும் :

இப்பொழுது டர்மினலில் எதெனும் ஒரு இடட்தில் mouse’ஐ வைத்து Ctrl+Right Mouse Click செய்யவும். அப்பொழுது படத்தில் உள்ளது போல் mlterm’இன் அமைப்பு வரும், அதில் கிழே உள்ள படங்களிள் உள்ளது போல் உள்ளமைத்து கொள்ளவும்:

இதில் முக்கியமாக OpenType Layout ’ இல் Script Button’ஐ சொடிக்கினால் இவ்வாறு திரை வரும், அதில் tam என்ற Option’ஐ தேர்வு செய்யவும்:

மேலே உள்ளது போல் உள்ளமைத்தபின் தமிழ் டர்மினலில் நன்றாகவும் தெளிவாகவும் தெறிகிறது:

எடுத்துக்காடுகள்:

cat :

less :

vi:

பின்குறிப்பு:
இந்த டர்மினல் தமிழுக்கு ஏற்ப உள்ளது ஆனால், உருவாக்கிய பின் இதன் இயங்குமுறை நிலையானதாக இல்லை. இரண்டு முறை cat ஆணை பிறப்பித்தால் டர்மினல் சிறிதாகிறது அல்லது Segfault வருகிறது. நான் அதை மேலும் பரிசொதித்துபாற்க்கவில்லை.

4 Likes

மிக்க நன்றி @VigsVj செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.