இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு - திட்டமிடல்

மிக்க நன்றி @Kalarani_Lakshmanan உங்கள் விருப்பமான தலைப்பை நீங்களே இங்கு எழுதுங்கள்.

நாளை (15-08-2022) மாலை 5 மணிக்கு இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு பற்றிய கூட்டம் நடைபெர உள்ளது.

இந்த இணைப்பை பயன்படுத்தி அனைவரும் இணையவும்.

நன்றி. இணைகிறேன்.

இன்றைய இணையவழிச் சந்திப்பில் தமிழ் இணையக் கழகம் சார்பாக கலந்துகொள்கிறேன்

அவசியம் கலந்துகொள்கிறேன்

இரண்டாவது கட்டற்ற மென்பொருள் மாநாடு - திட்டமிடல்

திட்டமிடல் - முதல் சந்திப்பு - நிகழ்வுக் குறிப்புகள்
15-8-2022 மாலை 5-7 மணி

பங்கு பெற்றோர்

தனசேகர்
துரை மணிகண்டன்
அசோக்
சிசரவணபவானந்தன்,தமிழறிதம்
சீனிவாசன்
தமிழரசன்
அபிராமி
பரமேஸ்வர்
முத்து ராமலிங்கம்

நிகழ்வுகள்

அறிமுக உரை
நிகழ்ச்சி நிரல்
உரைகள்
பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய சிறு அரங்குகள்
கேள்விபதில்
உரையாடல்
துருவங்கள் நூல் வெளியீடு
தமிழில் கட்டற்ற வளங்களுக்கு பங்களிக்கும் சிலருக்கு பரிசு அளித்தல்

ஆகிய நிகழ்வுகளை மாநாடு நாளில் நிகழ்த்தலாம்.

கால அட்டவணை

10-1 - உரைகள்

10-11.30 2-3 உரைகள்
11.30 - 11.45 - இடைவேளை
11.45-1.00 2-3 உரைகள்

1-3 - மதிய உணவு, சிற்றரங்குகள், தேனீர்

3-5 - 3-4 உரைகள்
பங்கு பெற்றோர் கருத்துகள் - 20 minutes
முடிவுரை - 6 pm

எல்லா உரைகளும் 20-30 நிமிடங்கள், 10 நிமிடங்கள் கேள்வி பதில்கள்

பயிற்சிப் பட்டறைகள்
மாநாட்டுக்கு மறுநாள், முந்தைய சனி ஞாயிறுகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்து, பின்வரும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தலாம்

  1. Python - முத்து
  2. Linux intro - பரமேஸ்வர்
  3. Datascience - நித்யா
  4. Machine Learning - தமிழரசன்
  5. Devops - தனசேகர்

இடம் - ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பயிலகம்

இடம்

பின்வரும் இடங்களில் ஒன்றில் நிகழ்வை நடத்த முயன்று வருகிறோம்.

எஸ். ஆர். எம் பல்கலை
அண்ணா நூலகம்
மாநிலக் கல்லூரி

செலவுகள்

100 பேர் நிகழ்வில் பங்கு பெறுவர் என்று எண்ணி, பின்வரும் செலவுகளை எதிர் பார்க்கிறோம்.

இட வாடகை - 3000 (அண்ணா நூலகம்) முன் வைப்புத் தொகை 10,000
புகைப்படம், வீடியோ - 10,000

டீ பிஸ்கட் , மதிய உணவு ,டீ பிஸ்கட் - 300 ரூ
30,000 ரூ

சான்றிதழ் - 3000 ரூ
ஸ்டிக்கர் - 2000 ரூ

டீசட்டை - வேண்டாம். அதிக செலவு ஆகும்.

எழுது பொருட்கள் - கோப்புறை, நோட்டு, பேனா, நிகழ்வுக் குறிப்புகள், விளம்பரங்கள் - 100 ரூ
10,000 ரூ

நினைவுப் பரிசு ( புத்தகங்கள், சால்வை, ஷீல்டு ) - பேச்சாளர்களுக்கு
200 ரூ ஒருவருக்கு
40 x 200 = 8000 ரூ

மொத்த செலவுகள் - 66,000 ரூ
இதர செலவுகள் சேர்த்து 80,000 ரூ வரை ஆகலாம்.

பதிவு
இலவசமா? கட்டணமா? என்று விவாதித்தோம். இலவசமாக இருந்தால் மிக நன்று. ஆனால், உணவு, தேனீர் ஏற்பாடு செய்ய, துல்லியமான எண்ணிக்கை வேண்டும். எனவே குறைந்த பட்ச நன்கொடையாக ரூ. 250 ஐ பதிவு செய்யக் கோரலாம்.

பதிவு படிவம் உருவாக்க வேண்டும். அதில் நன்கொடை அனுப்பிய சான்று இணைக்க வேண்டும்.

பதிவு செய்ய இறுதி நாள் - செப்டம்பர் 10 2022

நேரலை ஒலி பரப்பு

இதற்கான வாய்ப்புகள், கருவிகள் பற்றி துரை. மணிகண்டன் அவர்கள் விரைவில் ஆய்ந்து பதில் தருவார்.

சான்றிதழ்கள்

கலந்து கொள்வோருக்கு, தேவையானோருக்கு, சான்றிதழ் வேண்டும். இவை கல்வித் துறையில் உள்ளோருக்கு பயன் தரும்.

துருவங்கள் - வெளியீடு
நிகழ்வில் துருவங்கள் நாவலை, அச்சு நூலாக வெளியிடலாம்.
அங்கே விற்பனை செய்யலாம். அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

பணிகள்

*** TODO முதல் செயல் - இடம், பேச்சாளர்களை முடிவு செய்தல் - சீனி
*** TODO அழைப்பிதழ், சான்றிதழ்- அசோக், முத்து, லெனின்
*** TODO உணவு, தேநீர் - துரை மணிகண்டன்
*** TODO ஸ்டிக்கர் அச்சிடல் - தமிழரசன்
*** TODO பேச்சாளர்கள் அழைப்பு - சீனிவாசன்
*** TODO சிற்றரங்குகள் அழைப்பு - முத்து
*** TODO துருவங்கள் வெளியீடு - தனசேகர்
*** TODO முன்பதிவு படிவம் வடிவமைப்பு - அபிராமி
பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண், பணி அல்லது படிப்பு, நன்கொடை சான்று ஆகிய விவரங்களை முன்பதிவு படிவத்தில் பெற வேண்டும்.

நன்கொடை செய்யும் வழிகள்

  1. கணியம் அறக்கட்டளை கணக்கிற்கு ரூ 250 UPI அல்லது bank transfer அனுப்ப வேண்டும்.

  2. அதன் திரைப்பிடிப்பை முன்படிவுப் படிவத்தில் சேர்க்க வேண்டும்.

  3. அதை சரிபார்த்து, வரவேற்பு மடல் அனுப்ப வேண்டும்.

வரவேற்பு மடலில், நிகழ்வு பற்றியும், சார்ந்த அமைப்புகள் பற்றியும் எழுத வேண்டும்.

*** TODO கல்லூரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்புதல் - தமிழரசன்
*** TODO முன்பதிவு, நன்கொடைகள் சரிபார்த்தல், பதிவு தொடர்பான கேள்விகளுக்கு பதில் தருதல், நிகழ்வில் அனுமதித்தல் - அபிராமி
*** TODO சமூக ஊடகங்களில் பரப்புரை செய்தல்
*** TODO பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தல் - தனசேகர்
*** TODO சான்றிதழ்கள் அச்சிடுதல் - பரமேஸ்வர், தமிழரசன்
*** TODO வரவு - செலவு பொறுப்பு -அபிராமி
*** TODO நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல் - கார்க்கி, கலீல்
*** TODO கலை நிகழ்ச்சிகள் - இடம் அனுமதித்தால்.
*** DONE டெலிகிராம் குழு - உருவாக்கம் - சீனி
*** TODO பேச்சாளர்கள்
முற்றிலும் பெண்களே பேச்சாளர்களாக இருப்பது, புதிய பேச்சாளர்களாக இருப்பது நன்று.

கலாராணி, அபிராமி, நித்யா, விஜயலட்சுமி, கௌசல்யா ஆகியோரைக் கேட்கலாம். இன்னும் பலரையும் கேட்க வேண்டும்.

இப்பணிகளில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் இங்கு பதில் தருக. அல்லது எழுதுக - KaniyamFoundation@gmail.com

இந்த மாநாடு மெய்நிகராகவும் நடைபெறுமா?

நேரடி நிகழ்வு தான்.

இணைய நேரலை இருக்கும்.

  1. மாநாட்டுக்குத் தேவையான வரைகலைப் பணிகளை (invitation, poster etc) நான் மேற்கொள்கிறேன்.

  2. பேச்சாளர்களுக்கு வழங்கப்படும் சீல்டுகளை - fully customized acrylic laser cutting மூலம் செய்து கொள்ளலாம். (இணைப்பை பார்க்க)

  1. துருவங்கள் மட்டுமல்லாமல் கணியம் வெளியிட்ட மின்னூல்களையும் அச்சுப் பதிப்பாக விற்கலாம் (மின் புத்தகங்கள் – கணியம்)

  2. கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான laptop stickers, stickers, badges களையும் விற்பனை செய்யலாம்.

மாநாட்டுக்கென ஒரு இலச்சினை உருவாக்குக

வணக்கம்-
செயலாளர் தமிழறிதம்

The Tamil Journal-தமிழ் இதழ் Canada Tamil News-Tamil சுகுமார்
இவரையும்
இணைந்து நடத்தும் குழுவில் இணையுங்கள்.
.

திறவூற்றுக் கல்வி வளங்களும், கல்வித் தொழில்நுட்பங்களையும் தமிழுக்கென உருவாக்குவதில் முனைப்பு

இன்று மாலை 6 மணிக்கு, மாநாட்டு திட்டமிடல் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த இணைப்பில் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.

மாநாடு இடம் குறித்து முன்னேற்றங்கள் இல்லை.
பேச்சாளர்கள், தலைப்பு, சிற்றரங்குகள் பற்றி இன்று உரையாடலாம்.

திட்டமிடல் - இரண்டாவது சந்திப்பு
21 ஆகஸ்டு 2022 மாலை 6 மணி

கலந்து கொண்டோர்

மோகன்
சரவண பவானந்தன்
தனசேகர்
சீனிவாசன்
அபிராமி
பரமேஸ்வர்

பேச்சாளர்கள்

நித்யா
கலாராணி
அபிராமி
சுகந்தி

சிற்றரங்குகள்

20 பேர்

  1. LibreOffice
  2. Firefox
  3. Games
  4. Gimp
  5. Inkscape
  6. 3d / blender
  7. Deskop environments - Gnome/KDE/
  8. Free Software Philosophy
  9. Wikipedia
  10. FreeTamilEbooks
  11. Creative Commons License
  12. Docker
  13. Kubernetes
  14. Linux Network Servers
  15. Python
  16. Emacs
  17. Flatpak
  18. Programming
  19. Golang/Rust
  20. Voice Mozilla project
  21. Tesseract OCR
  22. Arduino
  23. Raspberri Pi

இடம்

இலோயாலா
நேரலைக்கு வாய்ப்பு உள்ளதா?

அண்ணா நூலகம்.

payment gateway
gpay

razorpay - 2 %
payumoney - 2 %

மோகன், அபிராமி

முன்பதிவுப் படிவம்
Oh My Form
Next Cloud Form

வலைத்தளம்
4 Best Hugo Event Conference Themes For 2022 -
இதில் இருந்து ஒரு தளத்தை அபிராமி, தனசேகர் வடிவமைப்பர்

வலைத்தளப் பெயர்கள்

பின்வரும் பெயர்களில் ஒன்றை வலைத்தளத்திற்கு தெரிவு செய்யலாம்.

TossConf22.kaniyam.com

TossConf.TamilLinuxCommunity.org

TossConf.github.io

kaniyam.com/tossconf

tossconf.in

பணிகள்

  • TODO சிற்றரங்கு - அழைப்பு - பரமேஸ்வர்
  • TODO கட்டணம், முன்பதிவு படிவம் - மோகன்
  • TODO வலைத்தளம் - அபிராமி, தனசேகர்
  • TODO வலைத்தளம் பதிவு - சீனிவாசன், மோகன்
1 Like

நாளை, ஞாயிறு மாலை 6 மணிக்கு, மாநாட்டு திட்டமிடல் சந்திப்பு நடைபெறுகிறது.

Jitsi Meet

இந்த இணைப்பில் அனைவரையும் இணைய வேண்டுகிறேன்.

மாநாடு இடம் குறித்து முன்னேற்றங்கள் இல்லை. அடுத்த வார வெள்ளிக்குள் இடம் முடிவு செய்து விடலாம்.
வலைத்தளம், கட்டணம், பேச்சாளர்கள், தலைப்பு, சிற்றரங்குகள் பற்றி இன்று உரையாடலாம்.

2 Likes

மூன்றாம் சந்திப்பு - குறிப்புகள்

கலந்து கொண்டோர்

தனசேகர்
மோகன்
முத்து
துரை மணிகண்டன்
சரவண பவானந்தன்

இடம்
இலயோலா கல்லூரி பற்றி இந்த வாரத்தில் தெரியும்

வலைத்தளம்
தனசேகர் உருவாக்கி வரும் வலைத்தளம் காட்டினார்.

தேவையான மாற்றங்களை விரைவில் செயல் படுத்துவார்

இலச்சினை
லெனின் சில இலச்சினைகளை அனுப்பியுள்ளார். ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்

சிற்றரங்குகள்
பரமேஷ், முத்து இருவரும் இணைந்து சிற்றரங்குகளை திட்டமிடுவர்,

நன்கொடை
முன்பதிவு, நன்கொடைக்கான படிவம் RazorPay ல் மோகன் வடிவமைக்கிறார்.
சீனிவாசன், அதின் கணியம் அறக்கட்டளை விவரங்களை ஏற்றினார்.

செப் 1
செப்டம்பர் 1 அன்று முழு நிகழ்ச்சி விவரங்கள், பேச்சாளர்கள், வலைத்தளம் வெளியிட முயல்கிறோம்.

நன்றி லெனின்.

  1. மாநாட்டுக்கென எல்லாச் சமூக வலைத்தளங்களிலும் பக்கங்கள் தொடங்க வேண்டும். இன்னும் சில நாட்களே இருப்பதால், நாளும் மாநாட்டைப் பற்றிய பரப்புரைகளை அங்கே நடத்த வேண்டும்.
  2. இடம், நாள், நடத்துவோர் (இலயோலா இணைகிறார்கள் எனில், அவர்கள் துறை) முடிவாகி விட்டால், செய்தித்தாள், காட்சி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்ப வேண்டும்.
  3. பேச்சாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் படம், சிறு குறிப்பு வாங்கி அதை ஒரு பதிவாக(poster) சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம்.
  4. முடிந்தால் பேச்சாளர்களிடம் ஒரு நிமிடக் காணொலி வாங்கி அதையும் வெளியிடலாம்.
  5. மாநாட்டின் நேரலை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
  6. இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறையை எப்படி நடத்தப் போகிறோம்? என்ன தலைப்பு? யார் பயிற்சிக்குப் பொறுப்பு? என்பதைப் பற்றியும் பேச வேண்டும். Machine Learning, Artificial Intelligence போன்ற பெரிய தலைப்புகளில் மிக மிகச் சிறிய அறிமுகம் இருப்பது புதியவர்களை வெகுவாக ஈர்க்கும்.

இன்னும் சில கருத்துகளையும் பின்னர் பதிவிடுகிறேன்.

முதலில் நாள் மற்றும் இடத்தை விரைந்து முடிவு செய்யவும். பேச்சாளர்களை உறுதி படுத்தவும். அப்போதுதான் இணையதளம் வெளியிட முடியும்.