கணினிகளில் தமிழ் உள்ளீடு

வணக்கம்,
ஒரு பொதுவான கேள்வி,
நீங்கள் தமிழில் எவ்வாறு உள்ளீடு செய்கிறீர்கள்

  1. இணைய எழுத்துபெயர்பிகள்
  2. நிறுவப்பட்ட மென்பொருள்
  3. வண்பொருள் (தமிழ் விசைபலகைகள்)
  4. வேறேதேனும் வழி

நான் ஆன்ட்ராய்டு தொடுதிரை விசையை பயன்படுத்துகின்றேன்.
தமிழ் விசைகள் மேம்படுத்தும் ஒரு தன்னார்வ ஆராய்ச்சிக்கு தாங்கள் பதில்கள் பயனாக இருக்கும்.

நன்றி

2 Likes
  1. லினக்ஸ் கணினியில் ibus மற்றும் ibus-m17n நிறுவி அதில் தமிழில் இருக்கும் Tamil99 எனும் விசைப்பலகை முறையை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.
  2. ஆண்ராயிடில் கூகிள் வழங்கும் தமிழ் விசைப்பலகையை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.

லினக்ஸ் இயக்கு தளத்தில் ibus என்ற மென்பொருள் உள்ளது.

அதில் அனைத்து வகை விசைப்பலகைகளும் உண்டு.

அதன் மூலம் நான் தமிழ் 99 வகையை பயன்படுத்தி தட்டச்சு செய்கிறேன்.

Linux mint - ல் keyboard - ஐ பயன்படுத்தி தங்களிஷில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி இங்கேயும் தமிழ் உள்ளீடு பற்றிய உரையாடல் உள்ளது.

ஆக மென்பொருள் வழியே தமிழ் உள்ளீடு செய்கிறீர்கள். உங்கள் விசைபலகைகள் அப்போது ஆங்கில (ரோமானிய) QWERTY விசைகள் கொண்டவையா இல்லை தமிழ்99 விசைகள் கொண்டவாயா ?
QWERTY பயன்படுத்துவதில் தமிழ் எழுத்து குறிகளை எவ்வாறு ஞாபகம் வைத்துள்ளீர்கள்?

ஆம் QWERTY மட்டுமே இருக்கும்.

பழகினால் நியாபகம் இருக்கும்.

செந்தமிழும் தட்டச்சு பழக்கம்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்99 பழகும் போது, மடிக்கணனி விசைப்பலகையில் தமிழ் எழுத்துகள் கொண்ட sticker அச்சிட்டு ஒட்டினேன். ஓரிரு மாதங்களில் எளிதில் பழகி விட்டது.

காண்க.

1 Like

அல்லது துருவங்கள் ஆசிரியரை போல் தமிழில் தங்களுக்கு பிடித்த துறையை சார்ந்து ஒரு புத்தகத்தை கணினியில் எழுதி (தட்டச்சு செய்து) FreeTamilEbooks.com ல் வெளியிடுங்கள். தங்களுக்கும் பயன் தரும் தங்கள் புத்தகத்தை படிப்பவர்களுக்கும் பயன் தரும்.

துருவங்கள் ஆசிரியரின் தமிழ் தட்டச்சு கற்ற அனுபவம் இங்கே பகிரப்பட்டுள்ளது.

1 Like

Is there any open-source tamil 99 keyboard for android?

If you are using android on screen key board then tamil99 is not needed, but if you are connecting an external keyboard to tablet or phone then you can install this app

This has tamill99

Indic keyboard is open source app for android.

I use it for tamil99.

1 Like

நன்றாக‍‍‌‌‌‌‌‌‌‌‌‍‌‌‌‌‌‌‌‌‍ உள்ளது. நன்றி.