UUID NOT FOUND DROPPED TO EMERGENCY SHELL

I was trying to boot archlinux i can see the grub i seleceted arch it takes more than usual and i got this error msg.
Moreover i cant able to type anything the emergency shell

Help me solve this issue i fear that my ssd dead as this error regards to uuid not found onlinr source says like it could be cause of dead ssd. If it true how to find, need sone hand over to tackle this as i use linux as my daily driver. i have no windows in my machine.

என்ன பூட்லோடர் பயன்படுத்துகின்றீர்கள்? கிரப் அல்லது சிஸ்டம்டீ-பூட்?

Grub

கிர்ப் மெனு வரும் போது c அழுத்தவும், வரும் கமாண்ட் பிராம்டில்

ls -l

என்று கொடுத்து வுரும் தகவலை பகிரவும்.

கணினியை ரீபூட் செய்யவும், பின் கிரப் மெனு வரும்போது முதல் வரியில் வைத்து e அழுத்தவும். பின் வரும் வரியின் கடைசியில் ஒரு ஸ்பேஸ் விட்டு rootdelay=60 என்று கொடுக்கவும் பின் ctrl-x என்று அழுத்தவும். இது உங்கள் ext4 பார்டிஷன் டிடக்ட் செய்ய 60 நொடி காத்திருக்கும் அப்படியும் உங்கள் ext4 பார்டிஷன் கர்ணலுக்கு தெரியவில்லை எனில் கணினி மீண்டும் இதே சிக்கலை தெரிவிக்கும்.

ext4 சரியாக டிடக்ட் செய்யப்பட்டு விட்டது எனில் கணினி சரியாக பூட் செய்யப்பட்டுவிடும். ஆணால் உங்கள் டிஸ்க் முன்பை விட மெதுவாக இயங்குகின்றது என்று அர்தம்.

Its not detecting again get the same error.
Last night i updated my system is it cause for this issue due any corrupted pacakages or something else root cause. But i waited until update to get complete and then after 10 min i shutdown the machine. Adding i dont have live usb stick to do the maintenance.

உங்கள் initramfs கரப்ட் ஆகி இருக்கலாம் ஏனெனில் root பைல் சிஸ்டம் உங்கள் initramfs ஆல் டிடக்ட் செய்ய முடியவில்லை. உங்கள் கிரப் மெனுவில் fallback என்றி உள்ளதா? அதாவது வேறு ஒரு கர்ணலும் வேறு ஒரு initramfs ம் பூட் செய்ய வழி உள்ளதா? அப்படி இருந்தால் அந்த fallback என்றியை பயன்படுத்தி பூட் செய்து பாருங்கள்.

Fallback intrmfs also same it does not work

rootdelay=60 என்பதற்கு பதிலாக rootwait என்று கொடுத்து பூட் செய்து பார்க்கவும்.

Not working

புதிய லைவ் யூஎஸ்பி உருவாக்கி அதை பூட் செய்து பின் அந்த லைவ் எண்விராண்மண்டில் உங்கள் ரூட் பாட்டிஷன் மவுண்ட் ஆகின்றதா என்று பார்க்கவும். அதில் சிக்கல் வந்தால் fsck செய்து மீண்டும் மவுண்ட் செய்து பார்க்கவும். பின் கணினியை ரீபூட் செய்து சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும்.

I tried on to list hard drives live usb
Using “lsblk” but it does not shows ssd(arch installed) i went bios and checked there it shows no nvme device found what could the problem.

லைவ் யூஎஸ்பி பயன்படுத்தி வந்த lsblk கமாண்டின் வெளியீட்டை இங்கே பகிரவும். மேலும் அதே லைவ் பூட் செய்யப்பட்ட லினக்சில் டெர்மினலை துவக்கி வரும் கமாண்டை இயக்கவும்.

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

https://paste.rs/ULrp0

sudo mount /dev/sda2 /mnt; ls /mnt; sudo umount /mnt

இந்த கமாண்டை இயக்கவும் வரும் தகவலை பகிரவும்.

This hdd contains windows, nvme ssd contains arch linux. This ssd not detected in grub as well as live usb as it not present at all. I serached internet found that installed app calles “linux files system finder” on windows it was able to mount ssd and i took backup files from windows and it also says that ssd is corrupted but i can acces the entire ssd from windows it on and it is in good condition.

தாங்கள் விண்டோசிலோ அல்லது லினகசிலோ BIOS அப்டேட் ஏதேனும் செய்தீர்களா? அல்லது BIOS ல் ரீசெட் ஏதேனும் செய்தீர்களா? உங்கள் கணினியின் டிஸ்க் செட்டப் AHCI ல் இருந்து டீபால்ட் செட்டிங்கான RAID மோடிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Aug 10 07:16:18 archiso kernel: ahci 0000:00:17.0: Found 1 remapped NVMe devices.
Aug 10 07:16:18 archiso kernel: ahci 0000:00:17.0: Switch your BIOS from RAID to AHCI mode to use them.

உங்கள் பயாசில் RAID மோடில் இருந்தி AHCI க்கு மாற்ற வழி இருந்தால் அதை மாற்றிவிட்டு மீண்டும் SSD ல் இருக்கும் லினக்சை துவக்கி பார்க்கவும். சிங்கல் தீர்கின்றதா என்று கூறவும்.

After i got this issue i tried changing sata config from ahci to raid and reverted the changes yesterday it also does not solve the problem

தாங்கள் AHCI ல் இருந்து RAID ற்கு மாற்றி உள்ளீர்கள், ஆனால் லைவ் லினக்ஸ் RAID ல் இருப்பதால்தான் SSD லை கான முடியவில்லை என்று கூறுகின்றது.

RAID ல் இருந்து AHCI ற்கு மாற்றிவிட்டு மீண்டும் லைவ் பூட் செய்யவும். பின்

lsblk -f

கொடுத்து SSD தெரிகின்றதா என்று பார்க்கவும். அப்படி தெரியவில்லை எனில்

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

கொடுத்து வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.