While using linux hangs issue

வணக்கம், நான் அண்மையில் Linux mint cinnamon , Dual boot windows 10 உடன் நிறுவி பயன்படுத்தி வருகிறேன், கடந்த சில தினங்களாக அவ்வப்போது திடீரென கணினி தொங்கி(hang) ஆகி விடுகிறது. எந்த பொத்தானும் வேலை செய்யவில்லை, கணினியை முடக்க power button -யை பயன்படுத்தி வருகிறேன், மேலும் கணினியை இயக்கும் போது கீழ் கண்டவாறு திரையில் தோன்றுகிறது


Uploading: photo_6093545165881979902_y.jpg…

Hi
When this hanging happens ? While using any specific application (or) randomly hangs while using ?

Have you checked any pending updates in software manager ? If yes, kindly update your system

Also if possible can you share your pc spec ? Just to be clear of what you can expect from the hardware.

Hai
It hangs randomly while using,i have checked there is no pending updates in software manager,

sudo inxi -Flz

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


மேலே உள்ள தகவலை பின்பற்றி தங்கள் கணினியை அப்டேட் செய்யவும். பின் மீண்டும் இந்த சிக்கலை வரவழைக்க முயற்சி செய்யவும். அப்படி மீண்டும் சிக்கல் வந்தால் கீழே உள்ள கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

curl --data-binary @/var/log/Xorg.0.log https://paste.rs

மேலே உள்ள தகவலை பின்பற்றினேன், எனது மடிக்கணினி ஏற்கனவே அப்டேட் செய்யபட்டு இருந்தது. மேலே உள்ள சிக்கலை வரவழைக்க கணினியை முடக்கி, கணினியை இயக்கினேன் அப்பொழுதும் இதே சிக்கல் நீடிக்கிறது.


https://paste.rs/sZT

இந்த சிக்கல் எப்போது நடக்கின்றது? சிக்கல் வந்தபிறகு என்ன நடக்கின்றது? எப்படி மீண்டும் தங்களால் கணினியின் உள்ளே செல்ல முடிகின்றது?

இந்த சிக்கல் ஓவ்வொரு முறை கணினியை இயக்கும் போது வருகிறது, சிக்கல் வந்தபிறகு,தானாகவே உள் நுழைகிறது.

இந்த சிக்கல் தங்கள் கணினியில் உள்ள GPU டிரைவரால் நடக்கிறது. மொன்மேலும் தங்கள் GPU டிரைவர் அப்டேட் வரும்போது இந்த சிக்கல் கலைய வாய்ப்பு உள்ளது. இதனால் எந்த ஒரு பாதிப்பும் தங்களுக்கு இல்லையெனில் லினக்ஸ் மிண்டை தொடர்ந்து பயன்படுத்தவும். அப்படி இல்லையெனில் லேட்டஸ்ட் கர்னல் கொடுக்கும் Archlinux போன்ற லினக்ஸ் டிஸ்ட்ரோவை முயற்சி செய்து பார்க்கவும்.

அவ்வப்போது தொங்கி (hang) ஆகி விடுகிறது, இதற்கு வேறு ஏதேனும் வழி உள்ளதாங்க?

https://github.com/endeavouros-team/ISO/releases/download/1-EndeavourOS-ISO-releases-archive/EndeavourOS_Artemis_nova_22_9.iso

இந்த இணைப்பில் உள்ள EndeavourOS ஐ பென்டிரைவில் Flash செய்து தங்கள் கணினியை பென்டிரைவ் மூலமாக பூட் செய்து பார்க்கவும். அப்போதும் அதே சிக்கல் வந்தால் Radeon டிரைவர் சரிசெய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும் (அல்லது தாங்கள் கர்னல் டெவலப்பர்களிடம் Bug Report செய்து சிக்கலை சரிசெய்ய தெரிவிக்கலாம், அல்லது தாங்களே Radeon டிரைவர் நிரலை படித்து சிக்கலை தீர்க்க முயற்சிக்கலாம்). EndeavourOS ல் இந்த சிக்கல் இல்லை எனில் அதை Linuxmint க்கு பதிலாக நிரந்தரமாக தங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.