Why is my GPU not detected on my PC? please help me out

here AMD RX5500M GPU not shown.
Screenshot from 2022-07-29 19-32-46

1 Like

இதில் கூறும் வழிமுறையை முடிக்கவும். பின் லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி driver manager என்று தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். அதில் கூறும் வழிமுறையை பின்பற்றி சரியான GPU டிரைவரை நிருவவும்.

நன்றி.நீங்கள் கூறியவாறு பின்பற்றினால் “Your computer does not need any additional Drivers” என்று வருகிறது. kernel version - 5.15.0-41 - இல் தற்போது செயல்படுகிறது. நான் இதை 5.15.0-33 கு மாற்ற வேண்டுமா…

வேண்டாம்

sudo lspci -v 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும்.


இது போன்று வருகிறது.

https://paste.rs/WUZ என்று வருவது தான் இணைப்பு.

நன்றி. Link உள் செல்கையில் Display Controller இல் AMD RX5500M GPU இன் பங்களிப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் System info & System monitor இல் GPU காண்பிக்கப்படவில்லை. எனவே video editing , gaming , machine learning போன்ற task களில் GPU பங்களிப்பு என் PC இல் இல்லை என்றே தோன்றுகிறது. இதில் சிக்கல் ஒன்றும் இல்லை எனில் நான் நன்றியுடன் விடை பெறுவேன்.

Windows OS இல் GPU காண்பிப்பதை இணைத்துள்ளேன். குறிப்பு- Dual boot முறையில் Linux mint 20.3 cinnamon & windows 11 இயங்குகிறது என் PC இல் . நன்றி

இதில் உள்ள இணைப்பில் உள்ள தகவல்கள் வைத்து பார்க்கும்போது தங்களிடம் உள்ள கிராப்பிக்ஸ் கார்டுக்கு சரியான டிரைவர் நிருவப்பட்டுவிட்டது மேலும் அது சரியாக இயங்குகின்றது. மேலும் அதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் firefox ஓப்பன் செய்து அதில் about:support என்று கொடுக்கவும் பின் GPU #1 எனும் இடத்தில் தங்களின் கிராப்பிக்ஸ் கார்ட் பற்றிய விவரம் இருக்கும்.

விண்டோசில் இருக்கும் task manager ம் லினக்சில் இருக்கும் system monitor ம் ஒன்று அல்ல. விண்டோசில் இருப்பதை லினக்சில் எதிர்பார்காதீர்கள். லினக்ஸ் விண்டோஸ் அல்ல.

3 Likes

தகவல்களுக்கு மிக்க நன்றி… mohan sir and muthu sir…