Wifi not shown in linux mint

தோழர், இது சிக்கலுக்கு தற்காலிக தீர்வாகும். புதிதாக வந்த கர்ணலில் உங்கள் WiFi வன்பொருளுக்கு டிரைவர் சேர்க்கப்படவில்லை. அதுவே இந்த சிக்கலுக்கு காரணம்.

இங்கே உள்ள நிரந்தர தீர்வில் ஒன்றை முயற்சி செய்து நிரந்தர தீர்வை எட்டவும்.

  • புதிதாக கர்ணல் அப்டேட் வரும் வரை Grub boot menu வில் மூன்றாவது வரியை தேர்வு செய்து லாகின் செய்துகொள்ளவும். (மிகவும் எளிது, எந்த ஆபத்தும் ஏற்படாது)
  • லேட்டஸ்ட் லினக்ஸ் மிண்டை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். (மிக மிக எளிது, ஆணால் உங்கள் முக்கிய கோப்புகளை வேறு ஏங்கேனும் சேமித்து விட்டு, நிறுவியபின் மீண்டும் அந்த கோப்புகளை உங்கள் கணினியில் போடவேண்டும்)
  • உங்கள் லினக்ஸ் மிண்டை லேட்டஸ்ட் மிண்டிற்கு அப்கிரேட் செய்யவும். (எளிது, ஆணால் சற்று ஆபத்து உள்ளது, உங்கள் முக்கிய கோப்புகளை பேக்கப் எடுத்துவைத்துக்கொள்வது நல்லது).
  • லேட்டஸ்ட் கர்ணலில் விடுபட்டுப்போன டிரைவரை மேனுவலாக கம்பைல் செய்து நிறுவிக்கொள்ளவும் (கடினம்)