uname -a
lspci -vt
இந்த கமாண்டுகளை ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.
உங்கள் கணினியை இதர்நெட் கேபில் வழியாக இணையத்தில் இணைக்கவும். அப்படி இதர்நெட் கேபில் இல்லை எனில் உங்கள் ஆண்ட்ராய்டு போனை யூஎஸ்பி கேபில் வழியாக கணினியில் இணைத்து யூஎஸ்பி டீத்தரிங் செய்யவும். உங்கள் ஆண்ட்ராய்டு இணையத்தில் இணைந்திருத்தல் அவசியம்.
பின் உங்கள் கணினிக்கு வந்து இங்கே கூறியுள்ள வழிமுறையை பின்பற்றி உங்கள் கணினியை அப்டேட் செய்யவும்
பின் கணினியை ரீபூட் செய்துவிட்டு மீண்டும் சிக்கல் வந்தால் இங்கு கூறவும்.
It’s working fine sir…thank you
ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
sudo dmesg | grep efi:
இந்த கமாண்டை இயக்கவும், தகவல் ஏதும் வந்தால் உங்கள் கணினியில் EFI உள்ளது, தகவல் ஏதும் வரவில்லை எனில் உங்கள் கணினியில் BIOS உள்ளது.
கணினியை ரீபூட் செய்யவும், உங்கள் கணினியில் EFI இருந்தால் பூட் ஆகும்போது Esc தட்டச்சு பொத்தானை அழுத்திக்கொண்டே இருக்கவும். Grub Boot Menu வரும். உங்கள் கணினியில் BIOS இருந்தால் கணினி பூட் ஆகும்போது Left Shift அழுத்திக்கொண்டே இருக்கவும். Grub Boot Menu வரும்.
Grub Boot Menu வந்தபின் Advanced என்று தொடங்கும் வரியை தேர்வு செய்து Enter அழுத்தினால் புதிய மெனு வரும். அதில் மூன்றாவது வரியை தேர்வு செய்து Enter அழுத்தவும். பின் கணினியில் லாகின் செய்யவும். பின் இந்த சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.
சிக்கல் வந்தால் மீண்டும் ctrl-alt-t கொடுத்து டெர்மினலை துவக்கி
grep vmlinuz /boot/grub/grub.cfg
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
With or without USB tethering sir?
யூஎஸ்பி டீத்தரிங் செய்ய வேண்டியதில்லை.
normal
என்று தட்டச்சு செய்து Enter அழுத்தவும். வரும் திரையை பகிரவும்.
normal என்று கொடுத்தவுடன் லாகின் கேட்டதா? அல்லது normal கொடுத்து வந்த மெனுவில் தாங்கள் ஏதேனும் வரியை தேர்வு செய்து Enter அழுத்தியோ செய்தோ அல்லது முதல் வரியில் வைத்து Enter அழுத்தியோ லாகின் திரையை வரவழைத்தீர்களா?
No sir I didn’t do anything it’s come automatically
மீண்டும் ரீபூட் செய்து Esc அல்லது Left Shift அழுத்தி Grub Boot Menu வரவழைக்கவும். அந்த திரையை பகிரவும்.
And agian ask for login
லாகின் கேட்கும்போது லாகின் செய்யவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
sudo sed -i.bak '/GRUB_TIMEOUT_STYLE=/d;s/^.*GRUB_TIMEOUT=.*$/GRUB_TIMEOUT=5/g' /etc/default/grub
sudo update-grub
இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். கணினியின் லோகோ முடிந்தவுடன் ஒரு மெனு வரும் அப்போது Down Arrow தட்டச்சு பொத்தானை ஒரு முறை அழுத்தவும். அப்போது இருக்கும் திரையை இங்கே பகிரவும்.
லாகின் செய்யும்போது கொடுக்கும் பாஸ்வேர்ட்தான் sudo கேட்கும்போதும் கொடுக்கவேண்டும். அந்த பாஸ்வேர்டை சரியாக தட்டச்சு செய்யவும்.






