லினக்ஸ் மின்ட் - You are in emergency mode. - மீட்டெடுக்க உதவுங்கள்

வணக்கம். இன்று காலை லினக்ஸ் மின்ட் கணினியில் ஏதோ ஒரு கோப்பைத் தெரியாமல் அழித்து விட்டேன். மாலையில் தொடங்கும் போது உள்ளேயே நுழைய முடியவில்லை.
A start job is running for /dev/disk/by-uuid/ABFD-923E என்று நீண்ட நேரம் வருகிறது.

அதன் பிறகு You are in emergency mode. After logging in, type “journalctl -xtb” என்று தொடங்கிக் கேட்கிறது. கடைசியில்
Press enter for maintenance (or press Control-D to continue): என்று வருகிறது.

சரி என்று Enter கொடுத்தால், login: என்று கேட்கிறது. சரியான கடவுச்சொல் கொடுத்தும் உள் நுழைய முடியவே இல்லை. என்ன செய்வது என்று சொல்லுங்களேன்.

உங்களிடம் லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்ய பெண்டிரைவ் உள்ளதா? அப்படி உள்ளது என்றால் அதை உங்கள் கணினியில் நுழைத்து அந்த பெண்டிரைவ் வழியாக பூட் செய்யவும் (உங்கள் கணினியின் பூட் ஆர்டரை பெண்டிரைவிற்கு மாற்ற வேண்டும்). லினக்ஸ் மிண்ட் லைவ் என்விராண்மண்ட் வரும். அதன்பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo fdisk -l

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவ் இல்லை எனில் லேட்டஸ்ட் மிண்ட் ISO கோப்பை லினக்ஸ் மிண்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் பலினா எட்சர் பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளவும்.

சரி, செய்து விட்டுச் சொல்கிறேன்.

Disk /dev/loop0: 2.66 GiB, 2852716544 bytes, 5571712 sectors
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes


Disk /dev/nvme0n1: 476.94 GiB, 512110190592 bytes, 1000215216 sectors
Disk model: BC711 NVMe SK hynix 512GB               
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
Disklabel type: gpt
Disk identifier: 26489296-DF4D-4512-B75C-2C651FCB61EC

Device             Start        End   Sectors   Size Type
/dev/nvme0n1p1      2048     411647    409600   200M EFI System
/dev/nvme0n1p2    411648     673791    262144   128M Microsoft reserved
/dev/nvme0n1p3    673792  513269759 512595968 244.4G Microsoft basic data
/dev/nvme0n1p4 963874816  966074367   2199552     1G Windows recovery environmen
/dev/nvme0n1p5 966074368  997324799  31250432  14.9G Windows recovery environmen
/dev/nvme0n1p6 997326848 1000214527   2887680   1.4G Windows recovery environmen
/dev/nvme0n1p7 513269760  963874815 450605056 214.9G Linux filesystem

Partition table entries are not in disk order.


Disk /dev/sda: 7.26 GiB, 7798784000 bytes, 15232000 sectors
Disk model: Cruzer Blade    
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
Disklabel type: gpt
Disk identifier: 7F710194-A624-43FA-9BA2-5155CFB1273A

Device       Start      End Sectors  Size Type
/dev/sda1       64  5902403 5902340  2.8G Microsoft basic data
/dev/sda2  5902404  5910899    8496  4.1M EFI System
/dev/sda3  5914624 15231936 9317313  4.4G Linux filesystem
sudo blkid

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

/dev/nvme0n1p1: LABEL_FATBOOT="ESP" LABEL="ESP" UUID="A8FD-923E" BLOCK_SIZE="512" TYPE="vfat" PARTLABEL="EFI system partition" PARTUUID="b6a45920-4dd0-4fab-a76d-e22e07155a42"
/dev/nvme0n1p3: LABEL="OS" BLOCK_SIZE="512" UUID="82AA3747AA37374F" TYPE="ntfs" PARTLABEL="Basic data partition" PARTUUID="6152bd19-71c4-40a6-96d5-413a7709dcad"
/dev/nvme0n1p4: LABEL="WINRETOOLS" BLOCK_SIZE="512" UUID="32E49EFFE49EC48F" TYPE="ntfs" PARTUUID="58fca029-7c60-4e1b-be83-e9e5166d322e"
/dev/nvme0n1p5: LABEL="Image" BLOCK_SIZE="512" UUID="DC4E543D4E54129E" TYPE="ntfs" PARTUUID="1233ea01-89c6-4962-8803-7fa9c90100c0"
/dev/nvme0n1p6: LABEL="DELLSUPPORT" BLOCK_SIZE="512" UUID="C09C0B749C0B63EE" TYPE="ntfs" PARTUUID="73f9fb2a-c4bd-451c-80a3-d73cbb1d1c45"
/dev/nvme0n1p7: UUID="a14b8348-c4aa-425e-8cd3-05e091d82a71" BLOCK_SIZE="4096" TYPE="ext4" PARTUUID="748cf5f0-a139-4497-8836-9b9d0fb869fe"
/dev/sda1: BLOCK_SIZE="2048" UUID="2023-07-11-16-54-30-00" LABEL="Linux Mint 21.2 Cinnamon 64-bit" TYPE="iso9660" PARTLABEL="ISO9660" PARTUUID="7f710194-a624-43fa-9ba3-5155cfb1273a"
/dev/nvme0n1p2: PARTLABEL="Microsoft reserved partition" PARTUUID="017503b1-7b06-40d5-9c8b-a60e587940c7"
/dev/loop0: TYPE="squashfs"
/dev/sda2: SEC_TYPE="msdos" LABEL_FATBOOT="ESP" LABEL="ESP" UUID="8D6C-A9F8" BLOCK_SIZE="512" TYPE="vfat" PARTLABEL="Appended2" PARTUUID="7f710194-a624-43fa-9ba0-5155cfb1273a"
/dev/sda3: LABEL="writable" UUID="d18e629b-ab19-4e35-b69f-3f72393d7c10" BLOCK_SIZE="4096" TYPE="ext4" PARTUUID="caee09bb-0622-534d-a6f2-3f687030a15d"
sudo mount /dev/nvme0n1p7 /mnt; sudo cat /mnt/etc/fstab; sudo umount -A --recursive /dev/nvme0n1p7

இந்த கமாண்ட் வரியை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

# /etc/fstab: static file system information.
#
# Use 'blkid' to print the universally unique identifier for a
# device; this may be used with UUID= as a more robust way to name devices
# that works even if disks are added and removed. See fstab(5).
#
# <file system> <mount point>   <type>  <options>       <dump>  <pass>
# / was on /dev/nvme0n1p7 during installation
UUID=a14b8348-c4aa-425e-8cd3-05e091d82a71 /               ext4    errors=remount-ro 0       1
# /boot/efi was on /dev/nvme0n1p1 during installation
UUID=A8FD-923E  /boot/efi       vfat    umask=0077      0       1
/swapfile                                 none            swap    sw              0       0
sudo mount /dev/nvme0n1p7 /mnt; sudo journalctl --root /mnt --list-boots | tail -5; sudo umount -A --recursive /dev/nvme0n1p7

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

 -4 75361403d84e4784b30efd0b2e0143d8 Sun 2023-11-12 04:42:40 UTC—Sun 2023-11-12 04:45:28 UTC
  -3 6ae1295a994a4771b6c532baa66a21aa Sun 2023-11-12 07:14:30 UTC—Sun 2023-11-12 16:49:28 UTC
  -2 49cbfffd416741c69d91fa17c83a32a2 Mon 2023-11-13 03:39:32 UTC—Mon 2023-11-13 05:24:32 UTC
  -1 2f124e610601470d8c25b56a3f1e964b Mon 2023-11-13 11:09:28 UTC—Mon 2023-11-13 15:21:39 UTC
   0 528626c261164d37905f009e6253d78f Tue 2023-11-14 01:37:49 UTC—Tue 2023-11-14 05:27:13 UTC
sudo fsck -a /dev/nvme0n1p1

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

fsck from util-linux 2.37.2
fsck.fat 4.2 (2021-01-31)
/dev/nvme0n1p1: 541 files, 60390/100352 clusters

இப்போது கணினியை ரீபூட் செய்து பழைய லினக்ஸ் மிண்டை பூட் செய்து பார்க்கவும். மீண்டும் அதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

ஆமாம். அதே சிக்கல் வருகிறது

இப்போது லினக்ஸ் மின்ட் லோகோவைத் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறது. அடுத்த கட்டம் நகரவில்லை.

மீண்டும் ரீபூட் செய்யவும். பின் கணினியின் லோகோ முடிந்தவுடன் Esc ஐ விட்டுவிட்டு அழுத்திக்கொண்டே இருக்கவும். Grub மெனு வரும் அந்த திரையை பகிரவும்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு


திரை வந்தது.

இதற்கு,
Minimal BASH-like line editing is supported. For the first word, TAB lists possible command completions. Anywhere else TAB lists possible device or file completions.
grub>

என்று வருகிறது.

normal என்று டைப் செய்து Enter கீயை அழுத்தவும். Grub Menu வருகின்றதா என்று கூறவும்.

வருகிறது.