லினக்ஸ் மின்ட் - You are in emergency mode. - மீட்டெடுக்க உதவுங்கள்

மீண்டும் reboot செய்து, Esc கொடுத்தேன்.

கொஞ்ச நேரத்தில்,


என வந்தது.

Enter கீயை அழுத்தவும். என்ன வருகின்றது?

கணினியை ரீபூட் செய்து Esc கீயை விட்டுவிட்டு அழுத்தி Grub Menu வரவழைக்கவும். grub> என்று வந்தால் அங்கே normal என்று டைப் செய்து Enter அழுத்தி Grub Menu வரவழைக்கவும். பின் Grub Menu திரையை பகிரவும்.

Linux Mint 21.2 Cinnamon வெள்ளைப் பின்னணியில் இருக்கிறது.

முதல் வரியை தேர்வு செய்து பின் e கீயை அழுத்தவும். வரும் திரையை பகிரவும்.

இப்போது linux எனும் வரிக்கு வந்து கடைசியாக இருக்கும் quiet splash என்பதை எடுத்துவிட்டு systemd.target=rescue.target என்று கொடுக்கவும். பின் ctrl-x தட்டச்சு கோர்வையை அழுத்தவும். திரை ஒரு இடத்தில் நிற்கும் அப்போது திரைப்பதிவு எடுத்து பகிரவும்.

இது முன்னர் பார்த்த திரை போலவே இருப்பதாகத் தெரிகிறது.

கடைசியில் - முன்பு வந்தது போலவே, You are in emergency mode. After logging in எனத் தொடங்கும் வரிகள் வந்து விட்டன.

மீண்டும் கணினியை ரீபூட் செய்யவும். பின் Esc கொடுத்து Grub Menu வரவும். பின் முதல் வரியை தேர்வு செய்து quiet splash என்பதை எடுத்துவிட்டு systemd.unit=rescue.target (systemd.unit= என்று கொடுக்கவேண்டும், systemd.target= அல்ல) என்று தட்டச்சு செய்யவும். பின் ctrl-x கொடுத்து கடைசியாக வரும் திறையை பகிரவும்.

இப்போழுது மீண்டும் லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்யவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo mount /dev/nvme0n1p7 /mnt; sudo journalctl --root /mnt --list-boots | tail; sudo umount /dev/nvme0n1p7

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

  -9 deee086e27f54bf38ae4ef0f5d11a49b Thu 2023-11-09 06:26:53 UTC—Thu 2023-11-09 07:38:15 UTC
  -8 cf190371f13741d8a4038df6adc683c1 Thu 2023-11-09 13:09:07 UTC—Thu 2023-11-09 15:07:36 UTC
  -7 dc5fb4101391470ebe0fe0187fc921e1 Fri 2023-11-10 10:48:47 UTC—Fri 2023-11-10 13:48:54 UTC
  -6 27e054955d844306ab8f1f0d4886bbaf Sat 2023-11-11 03:27:12 UTC—Sat 2023-11-11 05:05:19 UTC
  -5 adf0a707f35f41b7969fb23ceb8f5af7 Sun 2023-11-12 04:41:53 UTC—Sun 2023-11-12 04:42:12 UTC
  -4 75361403d84e4784b30efd0b2e0143d8 Sun 2023-11-12 04:42:40 UTC—Sun 2023-11-12 04:45:28 UTC
  -3 6ae1295a994a4771b6c532baa66a21aa Sun 2023-11-12 07:14:30 UTC—Sun 2023-11-12 16:49:28 UTC
  -2 49cbfffd416741c69d91fa17c83a32a2 Mon 2023-11-13 03:39:32 UTC—Mon 2023-11-13 05:24:32 UTC
  -1 2f124e610601470d8c25b56a3f1e964b Mon 2023-11-13 11:09:28 UTC—Mon 2023-11-13 15:21:39 UTC
   0 528626c261164d37905f009e6253d78f Tue 2023-11-14 01:37:49 UTC—Tue 2023-11-14 05:27:13 UTC

தாங்கள் சாதாரனமாக பூட் செய்யும் எந்த தகவலும் டிஸ்கில் சேமிக்கப்படாமல் போகின்றது. ஆதலால் சாதாரணமாக பூட் செய்யும்போது நடைபெரும் சிக்கலை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

மீண்டும் ரீபூட் செய்து Grub Menu வந்து முதல் வரியில் e அழுத்தி quiet splash என்பதற்கு பதிலாக systemd.unit=initrd-fs.target என்று தட்டச்சு செய்து ctrl-x கொடுத்து பூட் செய்யவும். பின் திரை ஓடுவது நின்றபின் திரைப்பதிவு எடுத்து பகிரவும்.

மேலே உள்ள அதே வழிமுறையை பின்பற்றவும் இப்பொழுது systemd.unit=initrd-root-device.target என்று பயன்படுத்தவும். வரும் திரையை பகிரவும்.

மீண்டும் அதே வழிமுறை, ஆனால் இப்போது quiet splash எடுத்துவிட்டு init=/bin/bash என்று கொடுக்கவும். திரை ஓடுவது நின்றபின் திரைப்பதிவு எடுத்து பகிரவும்.