லினக்ஸ் மின்ட் - You are in emergency mode. - மீட்டெடுக்க உதவுங்கள்


சிக்கல் தொடர்ந்தால், புதிய நிறுவலுக்குப் போய் விடவா? உங்களையும் நீண்ட நேரம் வருத்துவது போல் உணர்கிறேன்.

முயன்று பார்போம். இந்த திரை ஏன் வந்துள்ளது என்று புரியவில்லை quiet splash என்பதற்கு பதிலாக init=/bin/bash கொடுத்தும் இந்த திரை வந்ததா?

1 Like

ஆமாம்

சரி, இப்போது மீண்டும் ரீபூட் செய்து லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் என்விராண்மெண்டுக்கு வரவும். பின் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo mount /dev/nvme0n1p7 /mnt; sudo file /mnt/bin/bash; sudo umount /dev/nvme0n1p7

இந்த கமாண்டை இயக்கவும். பின் வரும் தகவலை பகிரவும்.

/mnt/bin/bash: cannot open '/mnt/bin/bash' (No such file or directory)
sudo ls -l /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

total 0

sudo mount /dev/nvme0n1p7 /mnt

இந்த கமாண்டை இயக்கவும். இயக்கும்போது பிழை ஏதேனும் வருகின்றதா?

இல்லை

சரி இப்போது

sudo file /mnt/bin/bash
sudo ls -l /mnt

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sudo ls -l /mnt/usr

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

/usr/bin/ டைரக்டரி காணவில்லை, இதைத்தான் தாங்கள் நீக்கியுள்ளீர்கள். இப்போது இரண்டு வழிகள் உள்ளன

எளிய வழி

மீண்டும் லினக்ஸ் மிண்டை நிறுவிக்கொள்வது. அதற்கு முன் இப்பொழுது உள்ள பயனரின் தகவல்களை வேறு ஒரு இடத்திற்கு பேக்கப் எடுத்துக்கொண்டு பின் புதிதாக லினக்ஸ் மிண்ட் நிறுவிக்கொள்ள வேண்டும்.

கடின வழி

தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் லைவ் என்விராண்மெண்டில் இருந்து /usr/bin டைரக்டரியை அப்படியே /mnt/usr/bin ற்கு பதிவு செய்துகொண்டு மீண்டும் பழைய லினக்ஸ் மிண்டை பூட் செய்ய முயற்சிக்கலாம், 100% உத்திரவாதம் இல்லை, ஆனால் ஒரு ஷெல் பிராம்டை வரவழைத்து விடலாம். பின் பிரத்தியேக ஷல் ஸ்கிரிப்ட் எழுதி முன்பு இருக்கும் பேக்கேஜுகளை மீண்டும் ஒருமுறை நிறுவி அழிந்துபோன கோப்புகளை மீண்டும் வரவழைத்து விடலாம் (கிட்டத்தட்ட புதிய லினக்ஸ் மிண்ட் நிறுவுவது போலத்தான், ஆணால் பேக்கப் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை).

இரண்டில் எது வோண்டும் என்பதை தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

1 Like

சரி, மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் - காலத்தினால் செய்த உதவிக்கு. மீண்டும் லினக்ஸ் மின்டை நிறுவிக் கொள்கிறேன்.