I have a Windows 10 OS. I would like to install linux OS. But my laptop is too slow. If I tried to install Linux Whether it will cause any problem?
லினக்சை இண்ஸ்டால் செய்யாமல் லைவ் பூட் செய்யலாம், இந்த வழிமுறையை பின்பற்றவும்
-
All Versions - Linux Mint இந்த தளத்தில்
Linux Mint Releasesஎன்று ஒரு அட்டவணை இருக்கும், அந்த அட்டவணையில் முதல் வரிசையில்EDITIONஎனும் நெடுவரிசைக்கு கீழேCinnamonஎன்று இருக்கும். அதை கிளிக் செய்யவும். - அடுத்து வரும் இணைய பக்கத்தில் கீழே இறக்கினால்
Download Mirrorsஎனும் அட்டவணையில் முதல் வரிசையில்Mirrorஎனும் நெடுவரிசைக்கு கீழேLayerOnlineஎனும் இணைப்பை கிளிக் செய்யவும். ஒரு.isoகோப்பு தங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும் - அடுத்து https://etcher.balena.io/ இந்த தளத்தில்
Download Etcherஎன்று கிளிக் செய்யவும். பின்Download Etcherஅட்டவணையில் இரண்டாவது வரிசையில் (Portable) இருக்கும்Downloadஎனும் இணைப்பை கிளிக் செய்யவும். ஒரு.exeகோப்பு தங்கள் கிணினியில் பதிவிறக்கம் செய்யப்படும். - அடுத்து தங்களிடம் இருக்கும் ஒரு பெண்டிரைவை கணினியில் இணைக்கவும். அந்த பெண்டிரைவில் ஏதேனும் முக்கிய கோப்புகள் இருந்தால் அதை வேரு இடத்தில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். ஏனெனில் இந்த பெண்டிவைவில்தான் நாம் லினக்சை எழுத (Flash) போகிறோம்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட
.exeகோப்பை இரண்டு முறை கிளிக் செய்து இயக்கவும். வரும் திரையில்Flash from Fileஎன்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்த.isoகோப்பை தேர்வு செய்யவும். - பின் திரையில்
Select targetஎன்பதை கிளிக் செய்து தங்கள் பெண்டிரைவை தேர்ந்தெடுக்கவும். - பின்
Flash!என்பதை கிளிக் செய்யவும். இப்போது அந்த.isoகோப்பானது தேர்வு செய்யப்பட்ட பெண்டிரைவில் எழுதப்பட்டுவிடும். - பிறகு தங்களுக்கு எந்த கணினியில் லினக்சை இயக்க விருப்பம் உள்ளதோ அந்த கணினியில் லினக்ஸ் எழுதப்பட்ட பெண்டிரைவை இணைக்கவும்.
- அந்த கணினியை பூட் செய்யும்போது பூட் மெனுவை வரவழைத்துக்கொள்ளவும். (உதாரணத்திற்கு, தங்களிடம் Dell கணினி உள்ளதெனில், கணினியில் Dell லோகோ திரை வரும்போது F12 அழுத்தினால் பூட் மெனு வரும், இதேபோல் ஒவ்வோரு கணினி தயாரிக்கும் நிறுவனமும் பூட் மெனு வரவழைக்க ஒரு தட்டச்சு பொத்தானை வைத்துள்ளார்கள். உங்கள் கணினிக்கு தேவைப்படும் பொத்தானை கூகிள் செய்து கண்டுபிடித்துக்கொள்ளவும்)
- பூட் மெனு வந்தபின் அதில் லினக்ஸ் எழுதப்பட்ட பெண்டிரைவை தேர்வு செய்து தட்டச்சில்
Enterபொத்தானை அழுத்தவும். இப்போது லினக்ஸ் தங்கள் பெண்டிரைவில் இருந்து பூட் செய்யப்படும்.
லினக்ஸ் எப்படி இயங்குகின்றது என்பதை சோதித்த பிறகு அதை நிறுவுவதா இல்லையா என்பதை முடிவு செய்யவும்.
1 Like
இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.
thank you for your replay. Is the speed of the local machine will be reduce?
இங்கே கூறியிருப்பதை படித்துப் பார்தீர்களா? என்ன புரிந்தது?