எனது லினக்ஸில் சவுண்ட் சேஞ்ச் பண்ணனும் சேஞ்சு ஆகல பிரைட்னஸ் சேஞ்ச் பண்ண முடியல என்ன பண்றது?

புதுசா லினக்ஸ் ஓ எஸ் இன்ஸ்டால் பண்ணி இருக்கேன். விண்டோ பிரைட்னஸ் அட்ஜஸ்ட் பண்ண முடியல சிஸ்டம் ஆடியோவும் கேட்க மாட்டேங்குது மற்றும் சிஸ்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கு.

என்ன லினக்ஸ் நிறுவி இருக்கின்றீர்கள்? லினக்ஸ் மிண்ட் டா?

Linux mint os

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி update manager தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். பின்பு Refresh பட்டன் அழுத்தவும். பின்பு Install பட்டன் அழுத்த அப்டேட்கள் நிருவ துவங்கும். பாஸ்வேர்டு கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயனர் கடவுச்சொல்லை உள்ளிடவும். அப்டேட் முடிந்தபின் வரும் திரையை பகிரவும்.

1 Like

சிஸ்டம் அப்டேட் பண்ணிட்டேன் பிரைட்னஸ் சவுண்டு சேஞ்ச் ஆக மாட்டேங்குது வாய்ஸ் வரல வேற எதுனா ஆப்ஷன் இருக்கா.

இப்போது view மெனு தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்யவும். பின் வரும் விண்டோவில் Continue கொடுக்கவும். பின் லேட்டஸ்ட் கர்ணலை தேர்வு செய்து Install கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது லாகின் செய்துள்ள பயனரின் கடவுச்சொல் கொடுத்து லேட்டஸ்ட் கர்ணலை நிருவவும். கர்ணல் நிருவியபின் ரீபூட் செய்யவும்.

ரீபூட் செய்த பிறகும் தங்களின் சிக்கல் நீடித்தால் இங்கு கூறவும்.

இது அப்டேட் பண்ணியாச்சு ஆனா வொர்க் ஆகல அதே பிரச்சனை தான் வருது சேஞ்ச் ஏதுமில்லை வேற எதுனா ஆப்ஷன் இருக்கா.

இப்போது என்னென்ன சிக்கல்கள் உள்ளன.

  1. brightness
  2. sound

வேரு ஏதேனும் உள்ளதா?

ls /sys/class/backlight

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

வேற எதுவும் இல்லை

ls /sys/class/backlight

இதை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

sudo lspci -v | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் இணைய இணைப்பை பகிரவும்.

ls /sys/class/backlight

தோழர், இந்த கமாண்டை மீண்டும் இயக்கவும். நன்றாக பார்த்து இயக்கவும். இடைவெளி இருந்தால் சரியாக கொடுக்கவும்.

ls /sys/class/backlight

இந்த கமாண்டை மட்டும் சரியாக இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

ls /sys/class/backlight/intel_backlight/

இதை கொடுத்து வரும் திரையை பகிரவும்

cat /sys/class/backlight/intel_backlight/brightness; cat /sys/class/backlight/intel_backlight/max_brightness

இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.